நேற்றைய தொடர்ச்சி...
கந்துவட்டி சீனாவின் வியாபார தந்திரம்!
சீனா தன், அளவு கடந்த செல்வத்தைஉலக நாடுகளுக்கு கடனாக கொடுப்பது வழக்கம். பத்து ஆண்டுகளுக்கு முன், பல பில்லியன் டாலரை இலங்கைக்கு கடனாகக் கொடுத்தது. நலிவுற்றிருந்த இலங்கையில் தொழில்களை துவங்குவது, அணைகள், பாலங்கள் கட்டுவது, சாலைகளை அமைப்பது, விமான நிலையம் கட்டுவது, ஹம்பந்தோட்டா துறைமுகத்தை மேம்படுத்துவது என, பல பணிகளுக்கு சீனா நிதி உதவி அளித்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ஆயுதங்களையும் கொடுத்து உதவியது.
அணு ஆயுதம்
தென்சீனக் கடலில் விடுதலைப் புலிகளுக்கு வட கொரியாவில் இருந்து ஆயுதம் கொண்டு வந்த கப்பலை, தென் சீனக் கடலில் சுட்டு வீழ்த்தி, இலங்கைக்கு உதவி புரிந்தது.பின், இலங்கையில் நடந்த தேர்தலில் நிதி உதவி செய்து, ராஜபக்சே குடும்பத்தினரை வெற்றி பெற வைத்தது. தலைக்கு மிஞ்சிய கடனை சீனாவிடமிருந்து வாங்கி இருக்கும் இலங்கை, தற்போது வட்டி கட்ட முடியாமல் திணறுகிறது. நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு விட்டது.
நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்ட சீனா, ஹம்பந்தோட்டாவை, 100 ஆண்டுகளுக்கு குத்தகை ஏற்று விட்டது.வருமானத்தில் 10 சதவீதம் மட்டுமே இலங்கைக்கு. மீதி அனைத்தும் சீனாவுக்கு. இது தான் சீனாவின் வியாபார தந்திரம்.துறைமுகத்தின் அருகிலேயே ஒரு செயற்கைத் தீவு அமைத்து, ராணுவ தளவாடங்களை, விமானம் தாங்கிய அணுஆயுத கப்பலை நிறுத்தி வைப்பது தான் சீனாவின் திட்டம்.
சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழி
இந்தியாவின் தெற்கு பக்கம் இலங்கையைக் கைக்குள் போட்ட சீனா, வடமேற்கு பக்கத்தில் பாகிஸ்தானில் 4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து, தன் வசப்படுத்தி வருகிறது. இதுவும் பாகிஸ்தானுக்கு கடன் தான்
சீனாவின் கனவு திட்டமான, 'பெல்ட் அண்ட் ரோடு' நீண்ட பாதை, சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கூடார் துறைமுகம் வரை செல்கிறது.
மேலும் பாலங்கள், அணைகள், கூடார் துறைமுகம் வரை ரயில் பாதை, கனிம தொழிற்சாலை என அனைத்திற்கும், சீனாவின் மிகப்பெரிய வர்த்தக வங்கி வாயிலாக பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்திருக்கிறது.பாகிஸ்தானின் மொத்த கடன், சீனாவிடம் வாங்கிய கடனை விட 10 மடங்கு அதிகம். இந்த நிலையில், சீனாவுக்கு மட்டும் பணத்தை திருப்பிக் கொடுத்து விட முடியுமா என்ன! இப்போது புரிகிறதா, சீனாவின் கொத்தடிமை நாடகம்?
சீனாவின் கொள்கையே, இந்த நுாற்றாண்டு, அதனுடையதாக தான் இருக்க வேண்டும் என்பது. 2050க்குள் உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
அதன் திட்டங்கள்:
* தன் நிலத்தின் கடைக்கோடியில் ஒட்டிக் கொண்டு, தனி நாடாகச் செயல்பட்டு வரும் தைவானை பிடிப்பது. இப்போது தைவானை காப்பாற்றி வருவது, அமெரிக்காவும், ஜப்பானும்
* பாகிஸ்தானையும், இலங்கையையும் பிடித்தாயிற்று; இப்போது ஆப்கானிஸ்தானை அடிமையாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது
* இந்தியாவை சுற்றியுள்ள இந்த மூன்று நாடுகளை தன் வசத்தில் வைத்துக் கொண்டால் பாகிஸ்தான் வாயிலாக, காஷ்மீரில் தொல்லை கொடுப்பது போல், அருணாச்சல பிரதேசத்தில் தொல்லை கொடுத்து, 2025க்குள் அதை மீட்டு விடுவது
* தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைக்க, நீண்ட நெடிய திட்டத்தை வைத்து
உள்ளது.
இதன் வாயிலாக, தென் சீனக் கடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். இது, அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் நிரந்தர தலைவலியாகி விடும்* ஆப்கனிலிருந்து படைகளை வாபஸ் பெறும் முடிவை, அமெரிக்கா தன்னிச்சையாக எடுத்தது. படைகள் திரும்பி வந்தபோது, ஐரோப்பிய நாடுகளுக்கு பலத்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
இனி அமெரிக்காவை நாடக் கூடாது என முடிவெடுத்த ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கென தனி பாதுகாப்பு படைப் பிரிவை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இவ்விஷயத்தில் சீனாவின் கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பது சில மாதங்களில் தெரிந்து விடும்.
ஆப்ரிக்க நாடுகளுக்கு கடனுதவி
ஆப்ரிக்க கண்டத்தில் 54 நாடுகள் உள்ளன. எல்லா நாடுகளிலும், சீனாவின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. சீனாவின் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இவ்விடங்களில் பணியாற்றுகின்றனர். போக்குவரத்துக்கான பாலங்கள், அணைகள், உயர் ரக சாலைகள், ரயில்வே பாதை, பார்லி., கட்டடங்கள், அரசு கட்டடங்கள் என அனைத்தும் சீனாவின் செலவு தான்.கனிம வளங்கள், சுரங்கங்கள் வெட்டி எடுப்பது, ஆப்ரிக்க மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து சீனாவில் உள்ள கல்லுாரியில் படிக்க வைப்பது, ஆப்ரிக்க நாட்டை 'பெல்ட் அண்ட் ரோடு' என்ற பழைய சில்க் ரோடு வாயிலாக, மத்திய ஆசியாவிலிருந்து இணைப்பது என, பலதரப்பட்ட வேலைகளில் சீனா ஈடுபட்டுள்ளது.
இதன் வாயிலாக, சீனாவிலிருந்து ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளான கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாயிலாக பாகிஸ்தான் வரை மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஆப்ரிக்க நாடுகளுக்கும் எளிதாக சென்று விடலாம்.
இது சீனாவின் உயிர்நாடி திட்டம்.ஆப்ரிக்காவில் உயர் ரக 'கம்ப்யூட்டர் சர்வர்'களை, சீனா தன் பொருளாதார முன்னேற்ற வேலைகளை கண்காணிக்க அமைத்தது. இந்த சர்வர்கள், சீனாவிலுள்ள ஷாங்காய் தலைமை சர்வரோடு இணைக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் வாயிலாக சீனாவின் முன்னேற்றம் எந்தளவு உள்ளது என்பது, விரல் நுனியில்!
சீனாவும், தென் அமெரிக்காவும்
தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகளில் கூட, சீனா கால் பதித்துள்ளது. பிரேசில், அர்ஜென்டினா, ஒலிவியா, சிசில், மெக்சிகோ, வெனிசுலா, கொலம்பியா முதலிய நாடுகளில், 4,060 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடு பெரும்பாலும் புதிய ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கே... அதாவது, 'பெல்ட் ரோடு' அமைப் பதற்கே! இது அமெரிக்காவுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது. இதனால் சீனாவைப் பற்றி பொய் பிரசாரம் செய்தது.
'பொல்லாத சீனா, தென் அமெரிக்க வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லும். ெவளிப்படைத்தன்மை இல்லாத சீனா' என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. சிரியாவின் உள்நாட்டுப் போரால், முக்கிய நாடுகளில் போடப்படும் தன், 'சில்க் ரோடு' திட்டத்திற்கு பாதிப்பு வந்து விடுமோ என சீனா கவலை கொள்கிறது.
தன் பொருளாதார வளத்தை மேலும் மேம்படுத்தி, 60 சதவீத உலக நாடுகளை தன்வசப்படுத்தி வைக்கவும், ஆசியாவையும், தென் அமெரிக்காவையும் இணைக்கப் போடப்படும் சில்க் ரோடு திட்டத்தை முழு மூச்சாக முடிக்கவும், வேகமாய் செயல்பட்டு வருகிறது சீனா.
பொருளாதார முதலீடுகளால் இந்தியாவையும் கைக்குள் போட்டுக் கொள்ளும் தந்திரத்தைக் கையாள முயன்ற சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் திட்டத்தை, பிரதமர் மோடி உணர்ந்து, சீன இறக்குமதிக்கு பல தடைகளை விதித்து, சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
கடந்த 2014 வரை சீனாவுக்கு இந்தியா கடன்பட்ட தொகை 27 லட்சம் கோடி ரூபாய்; 2021ல் அந்த தொகை 31 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. சீனாவிலிருந்து நாம் இப்போது, மின்சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்கிறோம். இங்கிருந்து இரும்பு தாதுக்கள், பருத்தி துணிகள், அலுமினியம், ஆர்கானிக் ரசாயனங்களை ஏற்றுமதி செய்கிறோம்.பிரதமராக மோடி இருக்கும் வரை, சீனாவைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்; ஆட்சி மாறினால், நம் கதி அதோகதி தான்!தொலைபேசி: டாக்டர் சு.அர்த்தநாரி இதய ஊடுருவல் நிபுணர்98843 53288 இ மெயில் prabhuraj.arthanaree@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE