கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஐ.,யில் தகவல் கேட்ட மாணவரை மிரட்டிய 2 இன்ஸ்பெக்டர்களுக்கு சிக்கல்

Added : அக் 23, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்ட சட்டக் கல்லுாரி மாணவரை மிரட்டிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மீது மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2019 அக்டோபரில், கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த சில தகவல்களை, சட்டக் கல்லுாரி மாணவர் ரமேஷ்குமார்,

அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்ட சட்டக் கல்லுாரி மாணவரை மிரட்டிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மீது மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2019 அக்டோபரில், கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த சில தகவல்களை, சட்டக் கல்லுாரி மாணவர் ரமேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரியிருந்தார். அதற்கு பதில் வரவில்லை. மாறாக, அப்போதைய செயல் அலுவலர் பெலிக்ஸிடம் டிரைவராக இருந்த மணிகண்டன் என்பவர், ரமேஷ்குமாரின் தந்தையை மிரட்டியுள்ளார்.

அதன்பின், அதிகாலை 2:00 மணியளவில், மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த துாயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி இன்ஸ்பெக்டராக இருந்த மணிவண்ணன், எஸ்.ஐ., ஆனந்தன் மற்றும் இரண்டு போலீசார், ரமேஷ்குமாரின் வீட்டுக்கு சென்று, அவரை 1 கி.மீ., ரோட்டுக்கு நடத்தி வந்து, மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இது குறித்து அவர், 2019 நவ., 13ல் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பி இருந்தார். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கடந்த ஆகஸ்ட்டில், மாநில மனித உரிமை ஆணையம் புகாரை விசாரணைக்கு எடுத்துள்ளது. முதல் விசாரணை ஆக., 6ல் கோவையில் நடந்தது. இரண்டாவது கட்ட விசாரணை, கோவை சர்க்யூட் ஹவுஸில் நடந்தது.

தற்போது வக்கீலாகப் பணியாற்றும் ரமேஷ்குமார், இந்த இரண்டு விசாரணைகளிலும் ஆஜராகி, 2019ல் நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார்.விசாரணைக்கு இரண்டு இன்ஸ்பெக்டர்களும் ஆஜராகவில்லை. எஸ்.ஐ., ஆனந்தன் ஆஜரானார். அடுத்த விசாரணை, ஜன., 7க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வக்கீல் ரமேஷ்குமார் கூறுகையில், ''கடந்த ஆட்சியின்போது, பல்வேறு சமூக ஆர்வலர்களும், ஆர்.டி.ஐ., ஆர்வலர்களும் மிரட்டப்பட்டனர். அவை குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். ''ஆர்.டி.ஐ..யில் நான் கேட்ட தகவல் இப்போதுதான் கிடைத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியுள்ளேன். விரைவில், வழக்குப்பதிவு செய்யப்படும் என நம்புகிறேன்,'' என்றார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X