அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்களுக்கு அமைச்சரின் 'மாமூல்' மிரட்டல்: அதிகாரிகள் திணறல்

Updated : அக் 24, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர்கள் அறிவிப்பது, வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது. ஆனால், ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.பண்டிகைக்காலம் வரும்போது, 'அதிகக் கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போக்குவரத்துத்துறை

பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர்கள் அறிவிப்பது, வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது. ஆனால், ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

பண்டிகைக்காலம் வரும்போது, 'அதிகக் கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டும் அந்த சம்பிரதாய எச்சரிக்கை, அமைச்சர் ராஜகண்ணப்பனால் விடுக்கப்பட்டுள்ளது.




latest tamil news




இந்த பஸ்களில் எப்போது, எவ்வளவு கட்டணம் வாங்கினாலும் அதிகக் கட்டணம் என்ற முறையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது தான் உண்மை நிலை. அவ்வாறு நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுமில்லை. அரசு ஒரு கட்டணத்தை நிர்ணயித்தால்தான், அதை விட அதிகக் கட்டணம் என்று சொல்ல முடியும்.

அரசு பஸ்களுக்கு ஒரு ஸ்டேஜ்க்கு இவ்வளவு என்றும், இரண்டு நகரங்களுக்கு இடையே எவ்வளவு என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதை விட அதிகக் கட்டணம் வாங்கும்போது, அரசு பஸ்களின் மீதே அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடிகிறது.



தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில், அதிகக் கட்டணம் வாங்கிய பல ஆயிரம் அரசு பஸ்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு கட்டணமே நிர்ணயிக்காத ஆம்னி பஸ்களுக்கு, எப்படி அதிக கட்டணம் என்று நடவடிக்கை எடுக்க முடியுமென்று தெரியாமல் அதிகாரிகள் குழம்புகின்றனர். இதனால்தான், அதிக வேகம், அதிக லக்கேஜ் என சம்பந்தமே இல்லாத காரணங்களைக் கூறி, அதற்கு மட்டுமே அபராதம் விதிக்கின்றனர்.

பண்டிகை நாட்களில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களிலும், வார நாட்களை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதுதான் வழக்கமாக நடக்கிறது. அதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தான், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.



latest tamil news




அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் எல்லாவற்றிலும் அதிகக் கட்டணத்தால் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். இந்த ஆம்னி பஸ்கள் போக்குவரத்தை அரசு வரன்முறைப்படுத்தி, அதற்குக் கட்டணத்தையும், வரியையும் நிர்ணயித்தால், அரசுக்கும் பெரும் வருவாய் கிடைக்கும். மக்களும் பாதிக்காத வகையில், போக்குவரத்து வசதியைப் பெற முடியும்.

ஆம்னி பஸ்களில் இருந்து கொட்டும் மாமூல், ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் போவது தான் இதற்கான ஒரே காரணம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போதைய அமைச்சரின் எச்சரிக்கையும், மாமூலை உயர்த்தித்தர வேண்டுமென்பதற்கு ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அறைகூவலாகவே தெரிகிறது.


-நமது சிறப்பு நிருபர்-


Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
31-அக்-202107:10:52 IST Report Abuse
Ram ஏழை மக்கள் ஆம்னி பஸ்களை பயன்படுத்துவது எப்போதிருந்து என்று தெரியவில்லை ..... விடியல் அரசால் ஒன்றும் ஆகப்போவதில்லை ....
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
28-அக்-202117:06:41 IST Report Abuse
INDIAN Kumar முன்னாள் அதிமுகவினர் பலர் இந்நாள் அமைச்சர்கள் அங்கு ஒரு மாபியாவுக்கு கப்பம் இங்கு வேறு அவ்வளவுதான் வித்தியாசம்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
28-அக்-202117:04:52 IST Report Abuse
INDIAN Kumar ஆட்சி மாறி இருக்கிறது காட்சிகள் மாறவில்லை. இன்னும் விடியவெ இல்லை மக்கள் பண மது போதையில் மூழ்கி கிடக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X