பொது செய்தி

இந்தியா

நீதித் துறை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதங்கம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
மும்பை :''நம் நாட்டில் நீதித் துறை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை; அவற்றை மேம்படுத்திபராமரிக்கும் நடவடிக்கைகளும், எந்தவொரு திட்டமிடுதலும் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆதங்கம் தெரிவித்துள்ளார். மத்திய சட்டத் துறை அமைச்சர் முன்னிலையிலேயே தலைமை நீதிபதி இவ்வாறு பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில்,
நீதித் துறை கட்டமைப்பு,  வசதிகள் ,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதங்கம்

மும்பை :''நம் நாட்டில் நீதித் துறை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை; அவற்றை மேம்படுத்திபராமரிக்கும் நடவடிக்கைகளும், எந்தவொரு திட்டமிடுதலும் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மத்திய சட்டத் துறை அமைச்சர் முன்னிலையிலேயே தலைமை நீதிபதி இவ்வாறு பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையின் புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.


மத்திய சட்டத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு, மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்ற இந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.


பின்னோக்கிய சிந்தனைஇதில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:கடந்த 2011ல் இந்த கட்டடம் கட்ட முடிவானது. ஆனால், இதைக் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்த தாமதம் மிகவும் கவலை அளிக்கிறது.நாடு விடுதலை அடைந்தது முதல், நீதித் துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுவதில் உள்ள பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. சிறந்த நீதித் துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

துரதிர்ஷ்டவசமாக, நீதித் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், பராமரிப்பதும், தற்காலிக அடிப்படையில் எவ்வித திட்டமிடலும் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன. பல நீதிமன்றங்கள் போதிய வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன. பல நீதிமன்றங்கள் சிதிலமடைந்த கட்டடத்தில் செயல்படுகின்றன. இந்திய நீதிமன்றங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில், எப்போதும் பின்னோக்கிய சிந்தனையே காணப்படுகிறது.

அதனால் தான், இன்னும் பாழடைந்த கட்டடங்களில் மிகவும் சிரமமான சூழலில் நீதிமன்றங்கள் இயங்கும் சூழல் நிலவுகிறது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டுமென்றால், நீதித் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். பெருகும் மக்கள் உரிமைகளுக்கான தேவைகளை சமாளிக்கவும், பொருளாதாரம், கலாசாரம் சார்ந்த முன்னேற்றத்திற்கும் நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.


தனி ஆணையம்உரிய நேரத்தில் கிடைக்காத நீதியால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம் பாதிக்கப்படுவதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகளும், மோசடி நபர்களும் தான் வருகின்றனர். பொது மக்கள் தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்ட, நீதிமன்றத்திற்கு அதிக அளவில் வர வேண்டும். அதற்கு, 'நீதிமன்ற படிக்கட்டில் கால் வைத்த தில்லை' என, பெருமை பேசும் குணாதிசயத்தை மக்கள் கைவிட வேண்டும். நீதித் துறை கட்டமைப்பு வசதிக்கென, தனி ஆணையம் ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னிலையில், நீதிமன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என, தலைமை நீதிபதி கிழிகிழியென கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமைச்சர் கூறுவது என்ன?உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அதே விழாவில் பேசியதாவது:ஒரு நாட்டில் ஜனநாயகம் வெற்றி கரமாக திகழ, நீதித் துறை சிறப்பாகச் செயல்படுவது மிகவும் முக்கியம். அதனால், நீதித் துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றாக, கடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கீழமை நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 9,000 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டதை குறிப்பிடலாம். இதில், 3,800 கோடி ரூபாய் மதிப்பில் நீதிமன்ற கூடங்களும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டும் திட்டமும் அடங்கும்.

மேலும், வழக்கறிஞர்களுக்கு 1,450 கூடங்கள், 1,450 கழிப்பறைகள், 3,800 'டிஜிட்டல் கம்ப்யூட்டர்' அறைகளும் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கிராம பஞ்சாயத்து நீதிமன்றங்களை மேம்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 'இ - நீதிமன்றம்' திட்டப்படி, இதுவரை 18 ஆயிரத்து 735 நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பால், 19.43 கோடி வழக்குகள் மற்றும் 15.50 கோடிக்கும் அதிகமான நீதிமன்றஉத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை சுலப மாக காணும் வசதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-அக்-202122:04:19 IST Report Abuse
Natarajan Ramanathan உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அசிங்கம் நமது (அ)நீதி துறைக்கு மட்டுமே உள்ள கோடை விடுமுறை, பூஜா விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை போன்றவையும் நீதிபதிகளுக்கு உள்ள டவாலி முறையும். அதை முதலில் ஒழித்துவிட்டு பிறகு மற்ற விஷயங்களை கேளுங்கள்....
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
24-அக்-202119:46:19 IST Report Abuse
Balaji உண்மை உலகிற்கு விளங்கும்...
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-அக்-202119:11:41 IST Report Abuse
spr "உரிய நேரத்தில் கிடைக்காத நீதியால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம் பாதிக்கப்படுவதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது." இது நீதிபதிகளின் வாய்தா வழங்குவதாலும் ஒத்தி வைப்பதாலும்தான் பெரும்பாலும் நடக்கிறது கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் பல மேல்முறையீட்டுக்கு வருகிறது இதனை இன்னும் சில மாதங்களில் ஒய்வு பெறப்போகும் இவரால் சரி செய்ய இயலாது அடுத்த குற்றச்சாட்டு " தற்போது, நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகளும், மோசடி நபர்களும் தான் வருகின்றனர்" அவர்கள் விசாரணைக்காக அங்கு வருவது சிறப்பானதே ஆனால் அவர்கள் குற்றவாளிகள் என்று அறிந்தும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் நீதிபதிகள் அவர்களைக் குறித்த விசாரணைக்கு எதனால் உத்தரவிடுவதில்லை? "3,800 கோடி ரூபாய் மதிப்பில் நீதிமன்ற கூடங்களும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டும் திட்டமும் அடங்கும்" நீதிபதிகள் வருமானம் குறைந்தவர்களா? அவர்களுக்கு பணிக்காலத்தில் வசிக்க வீடு என்ற நிலை மாறி அடிமாட்டு விலையில் நிரந்தரமாக சொந்த வீடு என்று மக்களின் வரிப்பணத்தில் கட்டித் தருவது என்ன நியாயம்? . " பொது மக்கள் தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்ட, நீதிமன்றத்திற்கு அதிக அளவில் வர வேண்டும்" இப்படியொரு நிலைமை வருமானால் அது நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டப் போயிற்று என்று பொருள் அது அவசியமா" தீர்ப்புகள் (குறிப்பாக அரசியல்வியாதிகள் தொடர்புடைய வழக்குகளில்) சொல்லப்படும் போக்கைப் பார்த்து நீதி மன்றச் செலவு மற்றும் வழக்கறிஞர் கையில் கொடுத்து இழப்பதனை வாதி கையில் கொடுத்து சமரசம் செய்து கொண்டால் நல்லது என மக்கள் நினைக்கிறார்கள் என்றும் கொள்ளலாமல்லவா? .பதவியில் இருக்கும் பொழுது செய்ய வேண்டியதனைச் செய்யாமல் பணி ஒய்வு பெரும் பொழுது பேசுவதும் பின் புத்தகங்கள் வெளியிடுவதும் மட்டுமே இவர்கள் செய்யும் உருப்படியான வேலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X