கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜாதியை காட்டி இறுதி சடங்கை தடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட்

Added : அக் 23, 2021
Share
Advertisement
சென்னை:'மயானமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், ஜாதி வேறுபாடின்றி சடலங்களுக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பொள்ளாச்சி தாலுகா, எரிப்பட்டியைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர் தாக்கல் செய்த மனு:என் கணவருக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் பாதையில், குறிப்பிட்ட சமூகத்தினரின் சடலங்களை தகனம் செய்கின்றனர்.

சென்னை:'மயானமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், ஜாதி வேறுபாடின்றி சடலங்களுக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொள்ளாச்சி தாலுகா, எரிப்பட்டியைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர் தாக்கல் செய்த மனு:என் கணவருக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் பாதையில், குறிப்பிட்ட சமூகத்தினரின் சடலங்களை தகனம் செய்கின்றனர். பாதையில் தகனம் செய்யக் கூடாது என, கலெக்டருக்கு மனு அளித்தேன். என் மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் படி, கோவை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


துரதிருஷ்டவசமானது



அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''மயானமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள, குறிப்பிட்ட சமூகத்தினரை அனுமதிக்காததால், நெடுஞ்சாலைத் துறை இடத்தில் 25 ஆண்டுகளாக தகனம் செய்கின்றனர். அதனால் யாருக்கும் இடையூறு இல்லை,'' என்றார்.மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. இறப்பிலும் கூட மனிதனை விட்டு ஜாதி அகலாதது துரதிருஷ்ட வசமானது.பல கிராமங்களில் மயான பகுதியை, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த அனுமதிக்காத நிலை உள்ளது. அதனால், அறிவிக்கப்படாத பகுதிகளில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இத்தகைய போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். எந்த ஜாதி, சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மயானத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.கிராமங்களில் இன்னும் உள்ள ஜாதிய முறை, இறுதிச் சடங்கிலும் அகலவில்லை. ஜாதி, சமூகம் பாராமல், அறிவிக்கப் பட்ட பகுதிகளில் சடலங்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.


அடிப்படை உரிமை

விளிம்புநிலை மக்கள் என்ற காரணத்துக்காக, அதை யாராவது தடுத்தால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களை தண்டிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான், இத்தகைய குற்றங்கள் கட்டுக்குள் வரும்.எனவே, ஜாதி அடிப்படையில் சடலங்களை தகனம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால், அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு செய்வது, அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. அத்தகைய அடிப்படை உரிமை, ஜாதி பாகுபாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.எரிப்பட்டி கிராமத்தில், மயானமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் எந்த ஜாதியைச் சேர்ந்தவரையும் இறுதிச் சடங்கு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X