நீதிபதிகள் ஊழல் செய்யக்கூடாது ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிபதிகள் ஊழல் செய்யக்கூடாது ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

Added : அக் 23, 2021
Share
கோவை: ''நீதிபதிகள் ஊழல் செய்யக்கூடாது,'' என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பேசினார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நேற்று கோவை வந்தார். ரெட்பீல்டு அரசு விருந்தினர் மாளிகையில், போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், அனைத்து நீதிபதிகள் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை

கோவை: ''நீதிபதிகள் ஊழல் செய்யக்கூடாது,'' என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பேசினார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நேற்று கோவை வந்தார். ரெட்பீல்டு அரசு விருந்தினர் மாளிகையில், போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், அனைத்து நீதிபதிகள் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஒவ்வொரு நீதிபதியும், வக்கீலாக பணியாற்றிய பிறகுதான் இப்பதவிக்கு வந்திருக்கிறோம். வக்கீலாக இருந்து தான் கற்றுக்கொண்டோம். நீதிபதி பொறுப்பில் இருக்கும்போது, வக்கீல்கள் வாதிடும் கருத்துக்களை வைத்து நிறைய கற்றுக்கொள்கிறோம்.நீதிபதிகள் ஊழல் செய்யக்கூடாது. ஊழல் செய்த குற்றச்சாட்டில், 25 நீதிபதிகளை, எனது பதவி காலத்தில் பணி நீக்கம் செய்துள்ளேன். நீதிபதிகள் ஒரு போதும் தவறு செய்யக்கூடாது. விசாரணை நடைபெறும் போது, நீதிபதிகள் கோபத்தை தவிர்க்க வேண்டும். பெரிய பதவியில் இருக்கிறோம் என்ற எண்ணம் வரக்கூடாது.நீதிமன்றத்தில் அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வதோடு, எளிமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சில வக்கீல்கள் தவறு செய்கிறாரர்கள் என்பதற்காக, அனைத்து வக்கீலையும் தவறான எண்ணத்துடன் நடத்த கூடாது.இவ்வாறு, தலைமை நீதிபதி பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X