மெக்சிகோவில் பலியான இந்திய பெண் யார்?

Added : அக் 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லாஸ் ஏஞ்சலஸ்:வட அமெரிக்க நாடான மெக்சிகோவின், துலும் நகரில் நேற்று முன்தினம் இரவு, இரண்டு போதை பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மீது, குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இறந்தனர்.பலியான
 மெக்சிகோவில் பலியான இந்திய பெண் யார்?

லாஸ் ஏஞ்சலஸ்:வட அமெரிக்க நாடான மெக்சிகோவின், துலும் நகரில் நேற்று முன்தினம் இரவு, இரண்டு போதை பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மீது, குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இறந்தனர்.

பலியான இந்திய பெண் குறித்து போலீசார் கூறியதாவது: இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சலி ரையாட், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் ஜோசில் 'லிங்டுஇன்' நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சுற்றுலா பயண அனுபவங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த இவர், அண்டை நாடான மெக்சிகோவின் துலும் நகர் சென்றுள்ளார்.

மறுநாள் தன் பிறந்த நாளை கொண்டாடவிருந்த அஞ்சலி ரையாட், நண்பர்களுடன் சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்தபோது, போதை பொருள் கடத்தல் கும்பலின் துப்பாக்கி சண்டையில், குண்டு பாய்ந்து பலியானார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-அக்-202112:55:46 IST Report Abuse
மலரின் மகள் அதீத சுதந்திரம் வேண்டுமென்று அமெரிக்கா செல்கிறார்கள். பாதுகாப்பு பெண்களுக்கு அதுவும் தனியாக இருக்கும் பெண்ணுக்கு எங்குள்ளது என்று சிந்தித்தறிந்து அங்கு செல்லவேண்டும். பொருளீட்ட எட்டு திக்கும் செல்ல வேண்டுமா? சரியான திக்கை நோக்கி செல்லவேண்டும். பொருளீட்டல் என்பது தொடர்ந்து வாழ் நாள் முழுதும் என்று அதன் பின் செல்லாமல் ஓரளவிற்கு வசதிகளை பெருக்கிக்கொண்டு தாய் நாட்டில் சேவை செய்ய அங்கேயே ஈட்டிய பொருளை கொண்டு வந்து அதை பெருக்கி அமைதியான நல்வாழ்வு வாழ கற்று கொள்ளவேண்டும். சவூதி அரேபியாவின் ஏதாவது ஒரு சிறிய நகருக்கு சென்று அங்கு அரசு வேலை அல்லது மிக பெரிய தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று பொருளீட்டலாம். சேமிப்புக்கள் பெருகும். செலவுகள் குறைவு. பாதுகாப்பான தேசம். பெண்கள் மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் என்பது பாதுகாப்பு விஷயத்திற்காக கொணரப்பட்டது. இப்போது நிறைய நீக்கி இருக்கிறார்கள். இரண்டு மூன்று வருடங்கள் வேலை செய்து பொருளீட்டி தாயகம் திரும்பி வாழலாம். போதுமென்ற நிறைவான வாழ்க்கை அமைதிக்கும் அன்பிற்கும் உத்திரவாதம் நல்கும்.
Rate this:
jagan - Chennai,இலங்கை
24-அக்-202117:52:31 IST Report Abuse
jaganஇங்க ஒண்ணும் சேப்டி கேயாரண்டீ இல்ல இப்போ. கடந்த 15 வருடத்தில் எல்லாமே தலைகீழ் இங்கே...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-அக்-202108:21:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மூட்டு வலி அம்மணி லண்டனுக்கு ஏன் போச்சாம்? இங்கேயே குண்டுச்சட்டியிலே கொழுக்கட்டை சுட்டுக்கிட்டு இருந்திருக்கலாமே? தவறான இடத்தில் தவறான நேரத்தில் - ஒரு விபத்தில் - பாவம், இறந்திருக்கிறார். பெண்களுக்கு எதிரிகள் வேற யாரும் தேவையில்லை. மூட்டுவலி அம்மணி உம்மை போன்ற ஓல்டு லேடீஸ் போதும்.....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-அக்-202108:22:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்உக்கிர பிரதேசத்தில இந்த பொண்ணு தனியா போகமுடியுமா? இல்லை நீங்க தான் போகமுடியுமா ??...
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
30-அக்-202102:21:47 IST Report Abuse
Venkateshசம்பந்தம் இல்லாமல் உளறாதே, உன் குதிரை கடிவாளம் சிந்தனையை விட்டு முதலில் வெளியே வா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X