பேராசை வந்தால் பணத்திற்கு 'ஆப்பு' '‛சைபர் கிரைம்'

Added : அக் 23, 2021
Advertisement
சிவகங்கை--அலைபேசி வழியாக பரிசுத்தொகை வந்துஉள்ளதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளதாக சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.அலைபேசிக்கு வரும் குறுந்தகவல், 'கூகுள் குரோமில்' வரும் 'போன்பே' ஆப்களில் பரிசு விழுந்திருப்பதாகவும், வாடிக்கையாளர் தகவல்கேட்டு (கே.ஒய்.சி.,)வங்கியில் இருந்து அனுப்புவதாக கூறி குறுந்தகவல் அனுப்பி
 பேராசை வந்தால் பணத்திற்கு 'ஆப்பு' '‛சைபர் கிரைம்'

சிவகங்கை--அலைபேசி வழியாக பரிசுத்தொகை வந்துஉள்ளதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளதாக சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.



அலைபேசிக்கு வரும் குறுந்தகவல், 'கூகுள் குரோமில்' வரும் 'போன்பே' ஆப்களில் பரிசு விழுந்திருப்பதாகவும், வாடிக்கையாளர் தகவல்கேட்டு (கே.ஒய்.சி.,)வங்கியில் இருந்து அனுப்புவதாக கூறி குறுந்தகவல் அனுப்பி பண மோசடியில் அதிகளவில் 'ேஹக்கர்ஸ்' ஈடுபட்டு வருவது சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது.முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி விபரங்களை கேட்டு, வங்கி கணக்கு, பாஸ்வேர்ட்களை பெற்று பணத்தை எடுத்து மோசடி செய்துவந்தனர். தற்போதுஇந்த மோசடியில் முன்னேற்றம் ஏற்பட்டு அலைபேசிக்கு வங்கி போன்று போலி 'லோகோ' வைத்து குறுந்தகவலாக 'லிங்க்' வரும். அந்த 'லிங்கை' அழுத்தினால் அலைபேசி, வங்கி கணக்கு, ஓ.டி.பி.,எண் கேட்கும் அதை வழங்கிய அடுத்த நொடியில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும்.

'கூகுள் குரோம்' வழியாக 'போன்பே' ஆப் ஒன்று வெளியாகும். அதை கிளிக் செய்தால்உங்களுக்கு ரூ.1934 பரிசு விழுந்துள்ளதாக (சிறிய எழுத்தில் டெபிட்) காட்டும். அந்த ஆப்பினை கிளிக் செய்து 'சென்ட்' கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கிற்கு 'ஆப்பு' வைப்பது போல் உங்கள் பணம் உடனே 'ேஹக்கர்ஸ்' கணக்கிற்கு சென்று விடும். இது போன்று கடந்த 3 மாதத்தில் மட்டுமே புதுடில்லி 'ேஹக்கர்ஸ்கள்' ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளனர். புதுடில்லி மற்றும் திரிபுரா மாநில 'ேஹக்கர்ஸ்கள்' தான் அதிகளவில் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. சிவகங்கை 'சைபர் கிரைமில்' மட்டுமே 20 வழக்கு பதிவாகியுள்ளது.ஆன்லைன் மோசடி குறித்து 155 260 எண், 'cybercrime.gov.in'' வெப்சைட்டில் புகார் தரலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X