எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுதும் 6,500 சிலைகள் 6 மாதங்களில் அகற்ற கணக்கெடுப்பு

Updated : அக் 24, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாவட்ட அளவில் பொது இடம், நெடுஞ்சாலை, அரசு நிலம், தனியார் இடங்களில் உள்ள சிலைகளை கணக்கெடுத்து, உறுதி செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது. கணக்கெடுப்பில், தமிழ கத்தில் 6,500 சிலைகள் வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக அம்பேத்கருக்கு 1,336 சிலைகள் உள்ளன.வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, கோனுர்கண்டிகையில், மேய்க்கால்
 தமிழகம் ,6,500 சிலைகள் 6 மாதங்கள், அகற்ற கணக்கெடுப்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாவட்ட அளவில் பொது இடம், நெடுஞ்சாலை, அரசு நிலம், தனியார் இடங்களில் உள்ள சிலைகளை கணக்கெடுத்து, உறுதி செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது.

கணக்கெடுப்பில், தமிழ கத்தில் 6,500 சிலைகள் வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக அம்பேத்கருக்கு 1,336 சிலைகள் உள்ளன.வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, கோனுர்கண்டிகையில், மேய்க்கால் புறம்போக்கில் சிலை வைப்பது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இவ்வழக்கில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த 6ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.


தமிழகத்தில் 6,500 சிலைகள் 6 மாதத்தில் அகற்றப்படுமா?

பொது விதிமுறைகள்



அதில், 'தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலம், பொது சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகியவற்றில் உள்ள சிலைகளை, மூன்று மாதங்களில் கணக்கெடுத்து அடையாளம் காண வேண்டும். 'அனுமதி இல்லாத சிலைகளை ஆறு மாதங்களில் அகற்றி, பூங்கா உள்ளிட்ட இடங்களில் வைக்க வேண்டும். சிலைகள், அதற்கான கட்டமைப்பு போன்றவை குறித்த பொது விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்' என, அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.இந்த உத்தரவுப்படி, மாவட்டங்களில் உள்ள சிலைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் சிலை கணக்கெடுப்பு இன்னும் முழுமை அடைய வில்லை.

தமிழகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகள் எத்தனை என்பது குறித்து போலீசாரும், வருவாய் துறையினரும் வாய் திறக்கவில்லை.இது பற்றி வருவாய் துறையினர், போலீசார் கூறியதாவது:மாவட்ட அளவில் உள்ள தேசிய, மாநில தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், சமூக தலைவர்கள் போன்றோருக்கு சாலை, பொது இடம், பூங்கா, அரசு அலுவலக வளாகம், தனியார் இடங்கள் என அனைத்தையும் பட்டியலிட்டு, அதற்கான ஆவணங்களையும் சேகரித்துள்ளோம்.


பட்டியல்



பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள அனைத்து சிலைகளும், முறையான அனுமதி பெற்றவை. நீதிமன்ற உத்தரவில் கூறியபடி சாலை, மக்கள் கூடும் இடங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை நிலவும் இடங்களில் வரும் சிலைகளை தனியாக பட்டியல் இட்டுள்ளோம்.
ஒவ்வொரு சிலையும் வைக்கப்பட்டது முதல், தற்போது வரை, ஏதாவது பிரச்னைகளை சந்தித்துள்ளதா என்ற விபரத்தையும் பட்டியல் இட்டுள்ளோம். சிலையை சுற்றி இரும்பு கம்பிகளால் கூண்டு அமைத்து பாதுகாக்கப்படும் சிலைகளை தனியாக பட்டியலிட்டுள்ளோம்.
சில மாவட்டங்களில், சில ஜாதி, அரசியல் ரீதியிலான தலைவர்களின் சிலைகளால் பிரச்னை இருக்கலாம். சில வழக்குகள் கூட நிலுவையில் உள்ளன; அவற்றை தனியாக பட்டியலிடுகிறோம்.மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள் போன்றோருக்கு சிலைகள் அமைக்கும் கோரிக்கை, இடம் தேர்வு, அதற்கான எதிர்ப்பு, ஆதரவு போன்ற கருத்துகளையும் பதிவு செய்து, அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஆறு மாதத்திற்குள்



போலீசார், வருவாய் துறையினரின் கணக்கெடுப்பின்படி, 2021 அக்., 21 நிலவரப்படி, தமிழகம் முழுதும் 6,308 சிலைகள் உள்ளன. துாத்துக்குடி, தென்காசி மாவட்ட சிலை கணக்கெடுப்பு முடியாத நிலையில், அந்த மாவட்ட சிலைகளையும் கணக்கில் சேர்த்தால் 6,500 சிலைகளுக்கு மேல் வரும். இதில், அதிகபட்சமாக அம்பேத்கருக்கு 1,336 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மிக அதிகபட்சமாக, சென்னையில் 550 சிலைகள் உள்ளன. அதற்கு அடுத்த இரு இடங்களில், 403 சிலைகளுடன் சேலம் மாவட்டமும்; 380 சிலைகளுடன் கடலுார் மாவட்டமும் உள்ளன; 41 சிலைகளுடன் திருப்பூர் மாவட்டம் கடைசியில் உள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகள், ஆறு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும். அகற்றப்படும் சிலைகளை, 'தலைவர்கள் பூங்கா' அமைத்து அங்கு வைக்கலாம். ஆறு மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முடிக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


latest tamil news



latest tamil news





சிலை வைக்க விதிகள் என்ன?



* ஊராட்சி முதல், மாநகராட்சி வரை உள்ள பகுதியில், எந்த இடத்தில் சிலை வைத்தாலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை இணைத்து, அந்த உள்ளாட்சியில் அனுமதி பெற்று, கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்

* மாவட்ட போலீசிலும் தடையில்லா சான்று பெற வேண்டும். இச்சிலைக்காக ஒரு கமிட்டி அமைத்து, சிலைக்கான பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும்

* சிலை வைப்பது தொடர்பாக கலெக்டர் வாயிலாக, வருவாய் நிர்வாக ஆணையர் வாயிலாகஉள்துறைக்கு சென்று, தலைமை செயலர் அனுமதி வழங்குவார். அதன்பின், சிலை அமைப்பதற்கான உத்தரவை கலெக்டர் வழங்குவார்

* குறிப்பிட்ட சிலை அமைப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும்; அந்த தலைவர், சமுதாயத்துக்கு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்; தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லது ஆதரித்தவர் என்றாலும், சிலை அமைப்பது சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்று தெரிய வந்தாலும், தலைமை செயலரும், டி.ஜி.பி., அலுவலகமும் ஆலோசித்து முடிவெடுக்கும்

* தனியார் பட்டா நிலத்தில், தன் இயக்க தலைவர், பொது தலைவர்களின் சிலைகளை வைக்க விரும்பினால், அதற்கான அனுமதியை கலெக்டரே வழங்குவார். அச்சிலைக்கான நபர் குறித்த முழு விபரமும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். - நமது நிருபர் குழு -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
24-அக்-202120:57:17 IST Report Abuse
Sankar Ramu மக்களை பிரிவினைவாதிகளாக ஜாதி வாதியாக மாற்றிய ஈ் வே ரா பொருக்கியின் சிலைகலை முதல்ல அகற்ற வேண்டும்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-அக்-202119:46:22 IST Report Abuse
அம்பி ஐயர் எதுக்காக சிலைகள் வைத்து சிலைக்கு ஒரு செலவு.... அப்புறம் அதைப் பராமரிக்க ஒரு செலவு... கூண்டுகள் வைப்பது... அவங்க பிறந்த நாள் இறந்த நாள்..ன்னு அதுக்கும் ஒரு செலவு..... இப்படி கணக்குப் பார்த்தால் அதுவே பல கோடிகளைத் தாண்டும்.... எந்த ஒரு தலைவருக்கும் பொது இடங்களில் சிலைகள் வைக்கவே கூடாது.... அது யாராக இருந்தாலும்.... அனைத்து சிலைகளையும் தூக்கி மியூசியத்தில் வைக்க வேண்டும்.... யார் யார் எல்லாம் எதிர்க்கிறார்களோ... அவங்க வீட்ல கொண்டு போய் வச்சுப்புடணும்.... முக்கியமாக சொரியான் சிலைகளை.... அவங்கவங்க வீட்ல வச்சு பூஜை செஞ்சு (அவ) மரியாதை செஞ்சுக்க வேண்டியது தானே.... ஒட்டு மொத்தமாக அனைத்து சிலைகளையும் அகற்றிவிட்டு... இனிமேல் சிலைகளே வைக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.... ஆனால் இவுனுங்களா செய்வானுங்க....??? எந்தக் கட்சியும் செய்ய மாட்டார்கள்.... மக்கள் வரிப்பணம் தான் வீண்....
Rate this:
Cancel
Arun kumar - Jubail,சவுதி அரேபியா
24-அக்-202115:56:13 IST Report Abuse
Arun kumar தென்காசி தூத்துக்குடி பெயர் இல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X