அரசியல் செய்தி

தமிழ்நாடு

தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி: 1 முதல் 8 வரை சுழற்சி முறையில் வகுப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Added : அக் 24, 2021 | கருத்துகள் (23+ 14)
Share
Advertisement
சென்னை: ''கடைகள் மற்றும் உணவகங்களுக்கான நேரக் கட்டுப்பாடுகள், நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் நவ., 1 முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவ., 15 வரை நீட்டிக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, வரும் 31ம் தேதி காலை 6:00 மணி வரை,
 தியேட்டர்கள், 100 சதவீத, 1 முதல் 8 வரை சுழற்சி,வகுப்பு -

சென்னை: ''கடைகள் மற்றும் உணவகங்களுக்கான நேரக் கட்டுப்பாடுகள், நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் நவ., 1 முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவ., 15 வரை நீட்டிக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, வரும் 31ம் தேதி காலை 6:00 மணி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
பண்டிகை காலங்களில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்; தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துதல் தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டம் முடிந்த பின், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

* நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், நவ., 15 வரை நீட்டிக்கப்படுகிறது.

* அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள், இரவு 11:00 மணி வரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.

* அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், சிகிச்சை தேவைகளுக்காக, நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.
நவ., 1 முதல் அனுமதி:

* அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.
* திரையரங்குகள், 100 சதவீதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.

* கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்தலாம்.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 'பார்'களுடன், அனைத்து வகையான தனித்து இயங்கும் பார்களும் செயல்படலாம்.
* மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும், கேரளா தவிர, சாதாரண மற்றும் 'ஏசி' பஸ்களில், 100 சதவீதம் இருக்கைகளில் பயணியர் அமர்ந்து பயணிக்கலாம்.

* அரசு பயிற்சி நிலையங்கள் மற்றும் மையங்கள், 100 சதவீதம் பயிற்சியாளர்களுடன் செயல்படும்


latest tamil news
* தேவையான பணியாளர்கள் மற்றும் கலைஞர்களுடன், அனைத்து வகையான படப்பிடிப்புகளும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தலாம். பங்கு பெறும் அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

* திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு, நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.


மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை
தமிழகத்தில் நவ., 1 முதல், ஒன்றாம் வகுப்பிலிருந்து வகுப்புகளை நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளைக் கொண்ட மழலையர் பள்ளிகள் துவக்க, அனுமதி அளிக்கப்படவில்லை. இவற்றை திறப்பது குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என, 20ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதை கருத்தில் வைத்து, பொதுமக்கள் எதிர்வரும் பண்டிகை நாட்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மருத்துவத் துறை சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து நிறுவனங்களும், கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (23+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
24-அக்-202121:08:08 IST Report Abuse
RaajaRaja Cholan அந்த பழைய பயந்தோகோலி மாவீரனின் தீபாவளி படத்துக்கா இந்த ஏற்பாடு ?
Rate this:
Cancel
24-அக்-202119:37:23 IST Report Abuse
பேசும் தமிழன் ஆனால் கோவிலை மட்டும் திறக்கவே கூடாது.... சர்ச் மற்றும் மசூதியை வேண்டுமானால் திறந்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
24-அக்-202114:10:58 IST Report Abuse
vpurushothaman எல்லாத்தையும் திறந்துட்டார் தளபதி. கொவிட்டையும் திறந்து விடாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X