பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தை மூட கிளம்புது எதிர்ப்பு : பன்னீர், கமல், ஆட்டோ ஓட்டுனர்கள் கோபம்

Updated : அக் 25, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (18+ 24)
Share
Advertisement
சென்னை :அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா காண முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த உணவகங்களால் பயன் அடைந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.மறைந்த ஜெயலலிதா, தன்
அம்மா உணவகம், மூட , எதிர்ப்பு ,பன்னீர், கமல், ஆட்டோ ஓட்டுனர்கள் கோபம்

சென்னை :அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா காண முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த உணவகங்களால் பயன் அடைந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.மறைந்த ஜெயலலிதா, தன் ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.
அதில் மிகவும் முக்கியமானது அம்மா உணவகம். ஏழை மக்கள், தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் போன்றோர், மலிவு விலையில் தரமான உணவு சாப்பிடுவதற்காக, 2013 மார்ச் 19ல், அம்மா உணவகம் துவக்கப்பட்டது.


மக்களின் அட்சய பாத்திரம்சென்னை மாநகராட்சி பகுதிகளில் 400 அம்மா உணவகங்களும், சென்னை அரசு மருத்துவமனைகளில் ஏழுஉணவகங்களும் செயல்படுகின்றன.அதேபோல், மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அரசு மருத்துவமனைகளிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும், அம்மா உணவகங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தன.இங்கு, 1 ரூபாய்க்கு இட்லி; 5 ரூபாய்க்கு பொங்கல், பல வகை கலவை சாதங்கள்; ௩ ரூபாய்க்கு தயிர் சாதம்; இரவில் ௩ ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் விற்பனை செய்யப்பட்டன.

இத்திட்டம், ஏழை மக்களுக்கு பெரிதும் பயன் அளித்ததை தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் இதை செயல்படுத்தின. தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டம், 2019 மார்ச் 4 முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கான செலவு தொகை, அம்மா உணவகங்களுக்கு வாரியத்தால் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, மக்களின் அட்சய பாத்திரமாக அம்மா உணவகம் திகழ்ந்தது; மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், அம்மா உணவகங்கள் மூடப்படலாம் என தகவல் பரவியது. அதை, தமிழக அரசு மறுத்தது. எனினும், அம்மா உணவகங்களை படிப்படியாக மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


சப்பாத்தி வினியோகம் நிறுத்தம்சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், இரவு நேரத்தில் சப்பாத்தி வினியோகம் நிறுத்தப்பட்டது. அதை, மாநகராட்சி நிர்வாகம் மறுத்தது.அதேநேரம், அம்மா உணவக ஊழியர்களின் வேலை நேரத்தை குறைத்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு மாதம் 9,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணிக்கு வரும்படி, அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனால், அந்த பெண்களின் ஊதியம் பாதியாகக் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், அவர்கள் வேலையை விட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.


* அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்:தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, ஜெயலலிதா பல்கலையை நீக்கியது; பல்நோக்கு மருத்துவமனையை மாற்ற முயற்சிப்பது; அம்மா உணவகங்களை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.சில நாட்களாக, இரவில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது. குறைவான விலையில் உணவுகள் வழங்கப்படுவதால், சென்னை மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி தயாரிக்க கோதுமை வழங்கப்படாததற்கு, நிதி நெருக்கடி தான் காரணம் என தகவல்கள் வருகின்றன. சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத் தான் இருக்கும். இது ஏழைகளுக்கான திட்டம். நிதி நெருக்கடியை காரணம் காட்டி, இந்த திட்டத்தை நீர்த்து போகச் செய்வதுஏற்கக்கூடியதல்ல.


* மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்:ஏழை, எளிய மக்களின் பசியாற்று மையமாக, அம்மா உணவகங்கள் திகழ்கின்றன.இவற்றை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை, கொரோனாவுக்கு பின் பன்மடங்கு பெருகியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு, தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த, சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன.
தி.மு.க., அரசும், 'அம்மா உணவகங்களைக் கைவிடும் எண்ணமில்லை' என அறிவித்திருந்தது. ஆனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.

'உணவகம் நஷ்டத்தில் இயங்குவதே காரணம்' என்கின்றனர். மாநகராட்சி வருவாயை பெருக்க பல வழிகள் இருக்கையில், சிறிய நஷ்டத்தை காரணம் காட்டி, நல்ல திட்டத்தை சிதைப்பது, மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா: அம்மா உணவகங்களில் பணியாளர்கள் அதிகம் இருப்பதாகக் கூறி, அவர்களை நீக்கும் நடவடிக்கையில் தி.மு.க., அரசு இறங்கி உள்ளது.இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த நினைக்கும் தி.மு.க., அரசின் செயலை
கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

என் சொந்த ஊர் திருநெல்வேலி.25 ஆண்டுகளாக சென்னையில் தங்கி வேலை பார்க்கிறேன்.கொரோனா காலகட்டத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், அம்மா உணவகமே எங்களை போன்றோருக்கு உணவளித்தது. கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாத நேரத்தில், நான்கு மாதங்கள் அம்மா உணவகத்தில் இலவசமாகவே உணவு சாப்பிட்டேன். 25 ரூபாய் இருந்தால் போதும். ஒரு நாள் உணவு செலவு முடிந்துவிடும். அம்மா உணவகத்தை அரசு மூடினால், எங்களைப் போன்ற ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுவர்.- எஸ்.முருகன், 42, ரிக் ஷா தொழிலாளி,தண்டையார்பேட்டை, சென்னை


அம்மா உணவகம் தேவைநான் 15 ஆண்டுகளாக எழும்பூரில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். எங்களைப் போன்ற ஓட்டுனர்கள் உள்ளிட்டதொழிலாளர்களுக்கு, குறைந்த விலையில் பசியை போக்கும் இடமாக அம்மா உணவகம் உள்ளது. எனவே, அம்மாஉணவகத்தின் உணவுத் தரத்தை உயர்த்தி, பல வகைஉணவுகளை கொண்டு வர வேண்டும்.-- ஏ.ரஞ்சித்குமார், 40, எழும்பூர், சென்னை5 ரூபாய்க்கு வயிறு நிறைய சாப்பாடு!நான் சென்னையில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிவருகிறேன். சவாரி முடித்து எங்கேயாவது அம்மா உணவகம்இருந்தால், ௫ ரூபாய்க்கு வயிறு நிறைய சாப்பிட்டு சென்றுவிடுவேன்.
அதனால், அம்மா உணவகத்தை மூட வேண்டும் என, அரசு நினைத்தால், அந்த எண்ணத்தை கைவிட வேண்டும்.-- பி.சுரேஷ், 42, கிரீம்ஸ் சாலை, சென்னை

Advertisement
வாசகர் கருத்து (18+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
25-அக்-202119:21:05 IST Report Abuse
spr நாம் அறிந்தோ ராயாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் ஒருவருக்கு வயிறார உணவு அளித்தால் போகும் என்பது நம் மண்ணின் தத்துவம் உணவு ஒன்றுதான் போதும் என்று சொல்லக்கூடிய ஒன்று செல்வி தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை இப்படித்தான் தொலைத்தார் போலும் ஆனால் இதற்கான செலவை அவருக்குச் சொந்தமான ரூ 3500 கோடி சொத்து இருப்பதாகவும் அது சசிகளாவால் உரிமை கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்பட்ட நிதியிலிருந்து கொடுக்கலாமே அரசுக்கும் பிரச்சினையில்லை சசிகலாவையும் அஇஅதிமுகவையும் அடித்த திருப்தி நம் முதல்வருக்கு கிடைக்குமே செய்யக்கூடாதா எவருமே எதிர்க்க மாட்டார்களே
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
25-அக்-202112:55:12 IST Report Abuse
PKN மூடுவதை எதிர்ப்பவர்கள் பணம் கொடுக்கட்டும்.வரி எதற்கு கட்டுகிறோம் எங்களுடைய அடிப்படை தேவைகளை நிறை வேற்று தானே ஏழைகள் வருமான்ம இல்லாதவர்கள் பயன் பெற்றால் ஒகே ஆன மீட்டருக்கு மேல் அதிக பணம் வாங்கும் ஆட்டோ டிரைவரகளுககெல்லாம் கொடுப்பது ரொம்ப ஒவர்‌ ஏற்கனவே ஆநங்க பெட்ரோல் டீசலில் அதிக வரியை கட்டுகிறோம்.GSTல வேறு அதிக இழப்பு மக்களுக்கு. இவ்வளவு துன்பத்தையும் தாங்கி கொண்டு எதிர்ப்பு கூட தெரிவிக்க இயலாமல் வரிகட்டுபவர்களுககு என்ன செய்ய போகிறது இந்த அரசாங்கங்கள் ஏற்கனவே ரேஷனில் இலவச உணவு பொருட்கள்/ கோயிலில் அன்னதானம் இப்படி நிறை கொடுத்ததும் இஅலலாமல் எதற்கு இன்னும் அம்மா உணவகம் என்ற பெயிரில் எங்கள் வரி பணத்தை வீணடிக்க வேண்டும். ஒன்று மூடுங்க இல்லை ஹாஸ்ட்ல் மாதிரி லாபநோக்கில்லாமல் basic விலைக்கு விற்பனை விலையை நிர்ணயம் செய்யுங்கள். அல்லது ஜெ வின் சொத்துக்களில் இருந்து அவர் கட்ட வேண்டிய 100 கோடியை பறிமுதல் செய்து மற்றும் அவருடைய பங்களாவை அரசுடமையாக்க பொது மக்கள் அனுமதியில்லாமல் செலவு செய்த தொகையை திரும்ப பெற்று அந்த பணத்தில் செய்யுங்கள். அஇஅதிமுவினர் அவர்களுக்கு ந்லல வாழ்க்கையை அமைத்து கொடுத்த ஜெ ஜூன் மேல் அக்கரை இருந்தால் அவர்கள் பணம் கொடுத்து நடத்தட்டும்.
Rate this:
Cancel
R SRIDHAR - Coimbatore,இந்தியா
24-அக்-202113:03:58 IST Report Abuse
R SRIDHAR என்ன பெருமை வேண்டியிருக்கிறதே விலைவாசி நாள்தோறும் விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை, ஜிஎஸ்டி வரி வசூலிப்பு, எல்லா பணமும் எல்லா பணம் மத்திய அரசு கஜானாவுக்கு தான் போகிறது இதில் 100 கோடி வசூல் சாதனை இலவசம் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எல்லாம் நம் வரிப்பணம் தான்.... இலவசம் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் நம் வாரி இரைக்கப்படுகிறது, வீணடிக்கப்படுகிறது என்பதில் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
Rate this:
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
24-அக்-202120:49:13 IST Report Abuse
Vasuஅண்ணாத்தே சொல்லிட்டாரு எல்லா வரியும் மத்திய அரசுக்கு போகுதுன்னு. இனிமே விடியல் அரசு எல்லா அலுவலகத்தையும் மூட போகுது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X