காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுக்குள் உள்ளது: காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
காஷ்மீர்: காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதம் கட்டுக்குள் வந்துள்ளதாக காங்.,மூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமாகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.சனியன்று (அக்.,23) காங்., நிர்வாகிகள் மற்றும் மாநிலத்தின் 40 தொகுதிகளின் பிரதிநிதிகளிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து குலாம் நபி ஆசாத் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் அவர் கூறியதாவது,, ‛காஷ்மீர் மாநிலத்தில்

காஷ்மீர்: காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதம் கட்டுக்குள் வந்துள்ளதாக காங்.,மூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமாகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.



latest tamil news


சனியன்று (அக்.,23) காங்., நிர்வாகிகள் மற்றும் மாநிலத்தின் 40 தொகுதிகளின் பிரதிநிதிகளிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து குலாம் நபி ஆசாத் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் அவர் கூறியதாவது,, ‛காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நம் மதத்தினிடையே பகையுணர்ச்சி வளர்க்க விரும்புகின்றனர்.' என்றார்.

மேலும், சமீபத்தில் நடநத சிறுமியின் படுகொலை சம்பவத்தை மேற்கோள் காட்டிய அவர் மாநிலம் முழுவதும் இச்சம்பவத்திற்கு கண்டனம் எழுப்பப்பட்டது . இது போன்ற சம்பவங்களுக்கு பொதுமக்கள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் வேண்டுகேள் விடுத்தார்


latest tamil news



ராகுல் பொய் பிரசாரம்

காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காங்., தலைவர் ராகுல் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மற்றும் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாதம் நீடித்து வருவதாகவும் நம் சகோதர சகோதரிகள் பாதிப்பு அடைந்து வருவதாகவும் டுவிட்டரில் ராகுல் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ராகுலின் பொய் பிரசாரத்திற்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீர் குறித்து அறித்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அமித் ஷா காஷ்மீரில் ஆய்வு

இதனிடையே மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா சனியன்று (அக்.,23) மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். முதல் நாளில் அங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராணுவ அதிகாரிகள், மத்திய போலீஸ் படை, மாநில போலீசார் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் பேசிய அமித் ஷா காஷமீரில் அமைதியை காக்க மத்திய முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-அக்-202119:23:41 IST Report Abuse
பேசும் தமிழன் அதை அப்படியே அந்த போலி காந்தி கும்பல் பப்பு மற்றும் பப்பி அவர்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
24-அக்-202115:45:57 IST Report Abuse
unmaitamil குலாம் சார், உண்மையை பேசினால் உங்களையும் சங்கி என்பார்கள். பரவாயில்லை. முட்டாள் தாலிபான் பட்டத்தை விட பொறுப்புள்ள சங்கி பட்டம் உயர்வுதான், பெருமைதான்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
24-அக்-202113:49:41 IST Report Abuse
Sivagiri ஓஹோ - எல்லாம் கட்டுக்குள்தான் இருக்குன்னு நாங்க சொல்றோம்ல , பின்ன ஏன் அமித்ஷா காஷ்மீர் செல்ல வேண்டும் ? என்று கேட்கிறார் போல . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X