கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Added : அக் 24, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தனி அலுவலரை நியமித்த தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்ததாக தமிழக அரசுக்கு புகார் சென்றது. மன்றத்தின் சங்க நிர்வாகக் குழுவை அரசு கலைத்தது. சிவகங்கை மாவட்ட பதிவாளர் கவிநிலவுவை தனி அலுவலராக அரசு நியமித்தது. அவர்

மதுரை:மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தனி அலுவலரை நியமித்த தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்ததாக தமிழக அரசுக்கு புகார் சென்றது. மன்றத்தின் சங்க நிர்வாகக் குழுவை அரசு கலைத்தது. சிவகங்கை மாவட்ட பதிவாளர் கவிநிலவுவை தனி அலுவலராக அரசு நியமித்தது. அவர் அக்.,19ல் பொறுப்பேற்றார்.

விக்டோரியா எட்வர்டு மன்ற சங்க செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சில உறுப்பினர்கள் உள்நோக்குடன் அரசிடம் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் தனி அலுவலரை நியமித்து பதிவுத்துறை செயலாளர் அக்.,14 ல் ஆயுதபூஜை விடுமுறை நாளில் உத்தரவு பிறப்பித்துள்ளார். எங்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை.

உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி: தனி அலுவலரை நியமித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை நவ.,8க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X