சசிகலாவுக்கு உரிமையில்லை: சிவில் நீதிமன்றத்தில் வாதம்

Added : அக் 24, 2021
Share
Advertisement
சென்னை:'அ.தி.மு.க. பொதுச்செயலராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை'என சென்னை சிவில் நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டது.கடந்த 2017 செப்டம்பரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலர் மற்றும் துணைப் பொதுச் செயலர் பொறுப்புகளில் இருந்து சசிகலாவையும் தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தப் பொதுக்குழுவை

சென்னை:'அ.தி.மு.க. பொதுச்செயலராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை'என சென்னை சிவில் நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த 2017 செப்டம்பரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலர் மற்றும் துணைப் பொதுச் செயலர் பொறுப்புகளில் இருந்து சசிகலாவையும் தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தப் பொதுக்குழுவை நடத்தியது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்கவும் கோரியிருந்தார்.சசிகலா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர் செம்மலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணன்; இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதாடினர். சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹேமா சம்பத் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் ஆஜராகினர்.

மதுசூதனன் தலைமையிலான அணியே அ.தி.மு.க. என அறிவித்து தேர்தல் ஆணையம் டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் கட்சியும் சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ததாகவும் வழக்கறிஞர்கள் வாதாடினர்.

மேலும் பொதுச் செயலராக கோரிக் கொள்ள சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவரது வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனவும் வாதாடினர்.வழக்கறிஞர்களின் வாதங்களுக்காக விசாரணை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X