உத்தரகண்ட் பனிப்புயல்: 12 சடலங்கள் மீட்பு

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021
Share
Advertisement
டேராடூன்-உத்தரகண்டில் கடுமையான பனிப் புயலில் சிக்கி உயிரிழந்த மலை ஏற்ற வீரர்கள் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 11ல், ஹர்சில் நகரில் இருந்து 11 பேர் லம்காகா கணவாய் வழியே சிட்குல் மலைக்கு பயணத்தை துவக்கினர்.கடந்த வாரம் வீசிய கடும் பனிப் புயலில் மலையேறும் குழுவினர் சிக்கி, திசை

டேராடூன்-உத்தரகண்டில் கடுமையான பனிப் புயலில் சிக்கி உயிரிழந்த மலை ஏற்ற வீரர்கள் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.



latest tamil news


உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 11ல், ஹர்சில் நகரில் இருந்து 11 பேர் லம்காகா கணவாய் வழியே சிட்குல் மலைக்கு பயணத்தை துவக்கினர்.கடந்த வாரம் வீசிய கடும் பனிப் புயலில் மலையேறும் குழுவினர் சிக்கி, திசை தவறினர். அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் விமானப் படை மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.


latest tamil news


இது குறித்து உத்தரகண்ட் டி.ஜி.பி., அசோக் குமார் கூறியதாவது:ஹர்சில் நகரில் இருந்து மலையேறிய ஏழு பேர் பனிப் புயலில் சிக்கி இறந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை தேடும் பணி நடக்கிறது. இது தவிர கடந்த 18ல் லம்காகா கணவாய் வழியே 17 பேர் மலையேறி உள்ளனர். அவர்களும் பனிப்புயலில் சிக்கி திசை மாறினர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இறந்து கிடந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சியோரை தேடும் பணியில் விமானப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X