பயங்கரவாதத்தை பரப்ப பாக்., நிதி குற்றம் சாட்டப்பட்ட ௪ பேர் விடுதலை

Added : அக் 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:பயங்கரவாதத்தை பரப்புவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்தஅமைப்பிடம் நிதி பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை டில்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெறுவோர் பற்றி என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹரியானா

புதுடில்லி:பயங்கரவாதத்தை பரப்புவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்தஅமைப்பிடம் நிதி பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை டில்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெறுவோர் பற்றி என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் மசூதி கட்டப்பட்டு வந்தது. இந்த மசூதி, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பிடமிருந்து நிதி பெற்று கட்டப்பட்டு வருவதாக மூன்று ஆண்டுக்கு முன் என்.ஐ.ஏ.,வுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், முகமது சல்மான், ஆரீப் கலாம், பஷீர் தரம்புரியா, முகமது உசேன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறியிருந்ததாவது:

முகமது சல்மான் பாகிஸ்தானை சேர்ந்த 'பலாஹி இன்சானியட் பவுண்டேஷன்' என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து நிதி பெற்றுள்ளார்.பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து இந்தியாவில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக, சல்மானிடம் இந்த நிதி வழங்கப் பட்டு உள்ளது. இந்த அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக, 2012ல் ஐ.நா., அறிவித்து தடை செய்துள்ளது.இவ்வாறு குற்றபத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'மசூதி கட்டுவதற்காக வும், ஏழை முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கவுமே வெளிநாட்டிலிருந்து நிதி பெறப்பட்டது' என்றார்.இருதரப்பு விசாரணைக்கு பின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: பயங்கரவாத செயல்களை அரங்கேற்றவே நான்கு பேரும் நிதி பெற்றனர் என்பதற்கான ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும், எந்த பயங்கரவாத அமைப்புக்கும், இதில் தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை. ரகசிய வார்த்தைகளுக்கான அர்த்தத்தை என்.ஐ.ஏ., யூகமாக கூறியுள்ளது. அது சரி என நிரூபிக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்கிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X