பொது செய்தி

இந்தியா

கோவிட் பாதிப்பால் ஆயுட் காலம் 2 ஆண்டு குறைந்ததாக தகவல்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021
Share
Advertisement
மும்பை-இந்தியாவில் கோவிட் பாதிப்பால், குழந்தை பிறப்பு அடிப்படையிலான உத்தேச ஆயுட் காலம் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐ.ஐ.பி.எஸ்., எனப்படும் மக்கள் தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் சூர்யகாந்த், இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுஉள்ளார். அதில்

மும்பை-இந்தியாவில் கோவிட் பாதிப்பால், குழந்தை பிறப்பு அடிப்படையிலான உத்தேச ஆயுட் காலம் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐ.ஐ.பி.எஸ்., எனப்படும் மக்கள் தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் சூர்யகாந்த், இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுஉள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: குழந்தை பிறப்பு மற்றும் மக்களின் இறப்பு விகிதம் நிலையாக இருந்தால், பிறந்த குழந்தையின் சராசரி வாழ்நாள் அடிப்படையில் அதன் ஆயுட் காலம் கணிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வழக்கத்தை விட 35 - 79 வயதிற்குட்பட்டோர் அதிக அளவில் இறந்துள்ளனர். இதன் காரணமாக பிறப்பு, இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அதனால் 2019 நிலவரப்படி ஆண்களின் உத்தேச ஆயுட்காலம் 72 ஆண்டுகள் என்ற நிலையில் இருந்து 69.5 ஆண்டுகளாக குறைந்து உள்ளது. இது பெண்களுக்கு 69.8 ஆண்டுகளில் இருந்து 67.5 ஆண்டுகளாக சரிவுஅடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


உலகில் ஒவ்வொரு தொற்று நோய் தாக்கத்தின் போதும் பிறப்பு விகிதம் குறைந்து மக்களின் உத்தேச ஆயுட்காலம் குறைகிறது.இது குறித்து ஐ.ஐ.பி.எஸ்., இயக்குனர் கே.எஸ்.ஜேம்ஸ் கூறும்போது, ''ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் பரவிய பின், மக்களின் உத்தேச ஆயுட்காலம் குறைந்தது. எய்ட்ஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின், மீண்டும் உத்தேச ஆயுட்காலம் அதிகரித்துள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X