கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவர் ஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உத்தரவு

Added : அக் 24, 2021
Share
Advertisement
சென்னை:உயர் நீதிமன்றத்துக்கான உதவியாளர், நுாலக உதவியாளர் பணிக்கான தேர்வில், மூன்றாம் பாலினத்தவருக்கு, ஒரு சதவீத ஒதுக்கீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் பதிவாளர் ஜெனரலுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியைச் சேர்ந்த, மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 30 ஆயிரம்

சென்னை:உயர் நீதிமன்றத்துக்கான உதவியாளர், நுாலக உதவியாளர் பணிக்கான தேர்வில், மூன்றாம் பாலினத்தவருக்கு, ஒரு சதவீத ஒதுக்கீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் பதிவாளர் ஜெனரலுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியைச் சேர்ந்த, மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவரையும் சமூகத்தில் பங்கேற்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர்கள், நுாலக உதவியாளர் என, பல்வேறு காலியிடங்களை நிரப்ப, 2021 மார்ச்சில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஒதுக்கீடு பற்றி தெரிவிக்கப்படவில்லை. கல்வி தகுதி பெற்ற பலர், எங்களில் உள்ளனர்.எனவே, காலியிடங்களில் ஒரு சதவீதம், மூன்றாம் பாலினத்தவருக்கு ஒதுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

உயர் நீதிமன்றத்துக்கு, அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வில், பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படாததால், மறு தேர்வு நடத்தக் கோரிய வழக்கு, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. இம்மனுவுக்கும் பதில் அளிக்க, அரசு மற்றும் பதிவாளர் ஜெனரலுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X