பொது செய்தி

தமிழ்நாடு

புத்துயிர் பெறுமா!! லைட் ஹவுஸ் - கொட்டிவாக்கம் மேம்பால சாலை..

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை கிழக்கு பகுதியில் உள்ள சாலைகளில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, கலங்கரை விளக்கம் - கொட்டிவாக்கம் இடையே கடலோர மேம்பாலச் சாலை அமைக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் புத்துயிர் அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக,

சென்னை கிழக்கு பகுதியில் உள்ள சாலைகளில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, கலங்கரை விளக்கம் - கொட்டிவாக்கம் இடையே கடலோர மேம்பாலச் சாலை அமைக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் புத்துயிர் அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.latest tamil news


வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி செல்பவர்கள், காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பசுமை வழிச்சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை, அடையாறு மேம்பாலம், ராஜிவ்காந்தி சாலையை பயன்படுத்துகின்றனர். திட்டம்இச்சாலைகளில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதுடன், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், நீதிபதிகளின் பங்களாக்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், இச்சாலைகளில் அதிகளவில் உள்ளன

.இதனால், சாலையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கு மாற்றாக, லைட்ஹவுஸ் - கொட்டிவாக்கம் இடையே, கடற்கரையை ஒட்டி மேம்பாலச்சாலை அமைக்க, 2008ம் ஆண்டு, அப்போதைய தி.மு.க., ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டது.இதற்கான சாத்தியகூறு அறிக்கை மட்டுமின்றி, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.லைட் ஹவுசில் துவங்கி நொச்சிகுப்பம், நொச்சி நகர், திடீர் நகர், டுமீங்குப்பம், முல்லை நகர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ஊரூர்குப்பம், ஆல்காட் குப்பம், ஓடைகுப்பம், திருவான்மியூர் குப்பங்களை ஒட்டி, இச்சாலை மேம்பாலம் பயணிக்கும்.லைட்ஹவுஸ் முதல் பெசன்ட் நகர் வரை 4.70 கி.மீ.,க்கு, முதற்கட்டமாக 430 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பெசன்ட்நகர் முதல் கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை வரை, இரண்டாவது கட்டமாக 5 கி.மீ.,க்கு 450 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இந்த மேம்பால சாலையை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக, கடற் கரையை ஒட்டி, 20 அடி உயரத்திற்கு துாண்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.இப்பணியை மேற்கொள்ள 500 குடியிருப்புகள் மற்றும் 24 வர்த்தக கட்டடங்கள், மதம் தொடர்பான சில கட்டடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.இந்த மேம்பால சாலையால், கடற்கரை சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என, சிலர் புரளி கிளப்பிவிட்டனர். மேம்பால சாலையால், தங்கள் கடற்கரை பங்களாக்களின் அழகு பறிபோகும் என, பெசன்ட்நகர் முதல் கொட்டிவாக்கம் வரை பங்களா வைத்திருப்பவர்கள் அஞ்சினர்.கோரிக்கைபொதுமக்களை துாண்டிவிட்டு, சில தரப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர். 2011ல் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இத்திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, திருவொற்றியூர் - துறைமுகம் இடையே, கடல்வழி மேம்பால சாலை அமைக்க அரசு விரும்புகிறது. இதற்காக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமாக அறிவிக்கப்பட்ட லைட்ஹவுஸ் - கொட்டிவாக்கம் இடையிலான கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை திட்டத்தையும், மாநில நெடுஞ்சாலைத்துறை துாசு தட்ட வேண்டும். முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


latest tamil news


இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, லைட்ஹவுசில் இருந்து திருவான்மியூர் செல்வதற்கு ஒரு மணிநேரம் ஆகிறது. இந்த மேம்பால விரைவுச்சாலை அமைந்தால், பயண நேரம், 45 நிமிடங்கள் மிச்சமாகும். இந்த சாலை அடையாற்றை கடக்கும் இடத்தில், அங்கு இடிந்த பாலம் இருந்த இடத்தில், நவீன வடிவில் மேம்பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டிருந்தது.

லைட்ஹவுஸ், பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, கொட்டிவாக்கம் ஆகிய இடங்களில், வாகனங்கள் ஏறி, இறங்குவதற்கு வழி அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு, அப்போதே இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின் கைவிடப்பட்டது. இன்றைய சூழலில், மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மாநில அரசு தான்முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
24-அக்-202119:40:26 IST Report Abuse
Balaji துட்டு அடிக்க முடியற எல்லாமே அவருக்கு கனவு திட்டம் தான்.. அதுலயும் மேம்பாலம் கட்டுவது சுழையாக மாட்டும் ஒரு சந்தர்ப்பம்.. எப்படி விட்டார்? அது போகட்டும்.. இது மீன்வளம், கடல் வளம், சுற்று சூழல் போன்றவற்றிற்கு எதிரான ஒரு செயல்.. இதை செய்யாமலிருப்பதே நல்லது..
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
24-அக்-202113:29:24 IST Report Abuse
அறவோன் ச்சவடாலான் என்னெத்த பண்ணாண் ????
Rate this:
Cancel
24-அக்-202113:11:58 IST Report Abuse
Rajagopal Srinivasan Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X