பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: புலி சைவமாக மாறுமா!

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (171)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:க.வேலாயுதம், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'வெறுமனே குற்றச்சாட்டு சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஆதாரத்துடன் சொன்னால் பொறுப்பேற்று கொள்கிறேன். ஒரு நிறுவனத்திற்கு சலுகை வழங்கப்பட்டதாக கூறும் புகாருக்கு, 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
இது, உங்கள், இடம், செந்தில் பாலாஜி, அண்ணாமலை


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:க.வேலாயுதம், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'வெறுமனே குற்றச்சாட்டு சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஆதாரத்துடன் சொன்னால் பொறுப்பேற்று கொள்கிறேன். ஒரு நிறுவனத்திற்கு சலுகை வழங்கப்பட்டதாக கூறும் புகாருக்கு, 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையெனில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் அரிச்சுவடி படிக்கும் அண்ணாமலைக்கு, என் நேரம், துறையின் நேரத்தை வீணடித்து பதில் அளிக்கிறோம்' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

இவரின் தகுதியோடும், திறமையோடும் ஒப்பிட்டுப் பார்த்தால், அரசியலில் அரிச்சுவடி படிக்கும் மாணவர் தான் அண்ணாமலை என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.ஆனால், அண்ணாமலை, அரசியல் அரிச்சுவடி படிக்கும் பள்ளியில் ஊழல் புரிவது எப்படி, அதில் சிக்கி கொள்ளாமல் தப்பிப்பது எப்படி போன்ற பாட திட்டங்கள் நிச்சயமாக இடம் பெற்றிருக்காது.

மின் துறையில் ஊழல் நடந்து உள்ளது என குற்றம் சாட்டியதற்கே, 'ஆதாரம் எங்கே, 24 மணி நேரம் கெடு' என்று கதறும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு கேள்வி...நீங்கள், தற்போது இருக்கும் தி.மு.க., கட்சியானது, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கவர்னரை சந்தித்து, அமைச்சர்கள் எட்டு பேர் மீது, 97 பக்க ஊழல் புகார் அடங்கிய மனுவை அளித்ததே, அது ஞாபகம் இருக்கிறதா? அதில் இருந்த ஒவ்வொரு புகாரின் முடிவிலும், 'கூறப்படுகிறது, சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது, பேசிக் கொள்கின்றனர்...' என்று தான் இருந்ததே தவிர, ஆதாரம் ஏதும் இருந்ததா?


latest tamil news


நீங்கள், உலக மகா உத்தமர் தான் என்று ஒத்து கொள்கிறோம். பின் எதற்காக, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக உங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது?'துாய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்காகத் தான் ஆளுங்கட்சியினர் செயல்படுவதாகவும் வேறு சொல்லியுள்ளீர்கள்.தங்களின் இந்த வாசகம் அதிசயமாக மட்டுமல்ல; ஆச்சர்யமாகவும் உள்ளது.

புலியானது, 'நான் சுத்த சைவமாக மாறி விட்டேன். வெறும் புல், பருத்தி கொட்டை புண்ணாக்கு தான் சாப்பிடுவேன்' என்று சொல்வது எத்தனை சதவீதம் சத்தியமோ, அதே அளவுக்கு நம்ப தகுந்தது, தி.மு.க., சார்பில், 'துாய்மையான நிர்வாகத்தை வழங்குவோம்' என்று சொல்வது!தி.மு.க.,வின் பசப்பு வாக்குறுதிகளை நம்பி, ஏமாந்து போய், ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்து விட்டோம். பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளிய மரம் ஏறித் தானே ஆக வேண்டும்.

அடுத்த நாலரை ஆண்டு காலத்திற்கு, தி.மு.க., நடத்தும் நாடகங்களையும், கூத்துக்களையும் நம்புவது போல நடித்து தான் ஆக வேண்டும்.அது சரி, அண்ணாமலை தான், 'வழக்கு தொடருங்கள்... நீதிமன்றத்தில் வந்து சந்திக்கிறேன்' என்கிறாரே...அப்புறம் என்ன செந்தில் பாலாஜி அண்ணே... உங்கள் மீது குற்றம் ஏதும் இல்லையென்றால், ஒரு மான நஷ்ட வழக்கு தொடுத்து, அவரை அலைய விட வேண்டியது தானே!

Advertisement
வாசகர் கருத்து (171)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh J - Madurai,இந்தியா
28-அக்-202111:35:21 IST Report Abuse
Venkatesh J புலியை குட்டியில் இருந்து வளர்க்கும் விதமாக வளர்த்தால் புலியும் சைவமாகும். என்ன ஒரு கேள்வி? அப்பா சாமி தாங்க முடியல? இந்த புலி சைவத்திலிருந்தே அசைவமும் எடுத்துக்கொள்ளும் வளர்க்கும் விதத்தை பொறுத்து. புரிந்தவர்களுக்கு வெளிச்சம்.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
27-அக்-202118:10:08 IST Report Abuse
dina புலி கண்டிப்பாக சைவமாக மாறும் அனால் தீ மு க கட்சியினரால் ஊழல் அராஜகம் கொலை செய்யாமல் இருக்க,முடியாது
Rate this:
selva - Chennai,இந்தியா
29-அக்-202116:45:46 IST Report Abuse
selvaதினா இன்னும் கொஞ்சம் கோக் குடி...
Rate this:
Cancel
Karthik - india,இந்தியா
25-அக்-202103:53:23 IST Report Abuse
Karthik தி.மு.க ஆட்சி நல்லதாக நாட்டு மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என நினைத்தால். ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் மின்சார அமைச்சர் மீது லஞ்ச ஊழல் புகார், தீபாவளி இனிப்பு வாங்கியதில் போக்குவரது துறை அமைச்சர் மீது லஞ்ச ஊழல் புகார். பெண்களை தனது வீட்டில் வேளை செய்ய சொல்லி மற்றொரு பெண் அமைச்சர் மீது புகார். கோஷ்டி சண்டை இதில் குருமா வேற. தீபாவளிக்கு திமுக வாங்கிய படம் ஓட வேண்டும் என்ற காரணத்தால் 100% தியேட்டர் திறக்கப்படுகிறது. இதற்கு எல்லாம் முதல்வர் கவனம் வைக்க வேண்டும்.
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
26-அக்-202119:14:33 IST Report Abuse
SureshKumar Dakshinamurthyதி.மு.க ஆட்சி நல்லதாக நாட்டு மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என நினைத்தால்ஹஹஹஹ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X