கோர்ட் செய்தி

தமிழ்நாடு

27 சதவீத ஒதுக்கீடு விவகாரம்: தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் மனு

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி,-'மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, இனி எந்த ஒரு வழக்கையும் அனுமதிக்க கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய

புதுடில்லி,-'மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, இனி எந்த ஒரு வழக்கையும் அனுமதிக்க கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.



latest tamil news



'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., வகுப்பினருக்கு ௨௭ சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதமும் மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டுதல்இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே 'மருத்துவ படிப்புகளில் ௨௭ சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த எந்த தடையும் விதிக்க கூடாது' என, வலியுறுத்தி தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நீண்ட போராட்டத்துக்கு பின் தான், மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி.,க்கு ௨௭ சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக இனி எந்த ஒரு வழக்கும் தொடர அனுமதி அளிக்கக் கூடாது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்து உள்ளோர், தகுதி பற்றி குறிப்பிடுகின்றனர். சமமான வாய்ப்புசமூகத்தில் அனைத்து பிரிவினரும் சமமான நிலையை அடையவே ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கவே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, ௨௭ சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
24-அக்-202123:07:58 IST Report Abuse
Aarkay "சமமான வாய்ப்புசமூகத்தில் அனைத்து பிரிவினரும் சமமான நிலையை அடையவே ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கவே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது." Very funny 74 ஆண்டுகளாய் மக்கள்தொகையில் ஒரு பிரிவை சமமான நிலையை அடையச்செய்யவில்லை எனில், அந்த ஒதுக்கீட்டால் என்னதான் பயன்? முற்பட்ட சமூகத்தினர் முதன்மை மதிப்பெண்கள் பெற்ற காலமெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. நன்றாய் படிப்பவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள், சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை. தங்கள் திறமையையே நம்புகிறார்கள். அவர்களுக்கு ஊன்றுகோல் உதவிகள் தேவைப்படுவதில்லை. இட ஒதுக்கீட்டை இன்னும் பத்தாண்டுகளுக்கு மட்டுமே நீட்டிக்கவேண்டும், அதன்பிறகு தகுதி அடிப்படையில் மட்டுமே, படிப்பும், வேலை வாய்ப்பும், பிற்படுத்தப்பட்ட சமூகத்திலுள்ள வசதியானவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை போன்ற கடுமையான, தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவேண்டிய நேரமிது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-அக்-202115:51:25 IST Report Abuse
Vena Suna கிறிஸ்துவ மதம் மாறியும் பழைய ஹிந்து பெயர்களில் இருப்போர் பலராம. இட ஒதுக்கீட்டை வாங்கி கொள்ள.. தர்மத்தை தட்டி பறிக்கும் இட ஒதுக்கீட்டில் எவனும் முன்னுக்கு வர முடியாது. ஏன் என்றால் சாபங்கள் உண்டு.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
24-அக்-202112:47:46 IST Report Abuse
Nellai tamilan கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இனி இந்த இருபத்து ஏழு செல்லாது என்று சேர்த்து உத்தரவு பிறப்பித்தால் நியாயமாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X