பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டத்தை பார்த்து வாகனத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய பஞ்சாப் முதல்வர்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஜாலிவான்: பஞ்சாப் விவசாயிகள் சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்கள் தாக்கலை எதிர்த்துப் போராடி வருகின்றனர். தற்போது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை பார்த்து வாகனத்தை நிறுத்தி அவர்களை நேரில் சந்தித்து தான் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உறுதி அளித்துள்ளார்.முன்னதாக

ஜாலிவான்: பஞ்சாப் விவசாயிகள் சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்கள் தாக்கலை எதிர்த்துப் போராடி வருகின்றனர். தற்போது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை பார்த்து வாகனத்தை நிறுத்தி அவர்களை நேரில் சந்தித்து தான் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உறுதி அளித்துள்ளார்.



latest tamil news


முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சர்ச்சைக்குரிய 3 விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் போராடி வருகின்றனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச விவசாய சங்கங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகலை அடுத்து காங்கிரஸ் கட்சி சரண்ஜித் சிங் சன்னியை புதிய முதல்வராக நியமித்தது.

இதனை அடுத்து அவர் பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து விவசாய மசோதாக்களை வாபஸ் பெறும்படி கேட்டுக் கொண்டார். தற்போது பொது இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து பேரணிகள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் ஜாலியன் கிராம பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாகச் சென்ற முதல்வர், போராடும் விவசாயிகளை கண்டு தான் பயணித்த வாகனத்தை நிறுத்தச் சொன்னார். விவசாயிகளை சந்தித்துப் பேசிய அவர், தான் பிரதமர் மோடி இடம் விவசாய மசோதாக்களை நீக்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகத் தெரிவித்தார்.


latest tamil news


மேலும் பஞ்சாப் விவசாயிகளுக்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று உறுதி அளித்தார். மேலும் பஞ்சாப் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பது தங்கள் அரசின் கடமை என்றும் அதனை தொடர்ந்து செய்வோம் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடியின் நெருங்கிய பணக்கார நண்பர்களின் லாபத்துக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை நீக்க தங்கள் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
24-அக்-202122:54:53 IST Report Abuse
Aarkay எல்லாம் ஒரே கூட்டம்தான் சாலை மரியல் செய்பவர்களையும், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பொது அல்லது தனியார் சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
24-அக்-202118:52:26 IST Report Abuse
பேசும் தமிழன் எல்லாம் நாடகம்... பேமென்ட் கொடுத்து ஆட்களை நிறுத்தி வைத்து... பிறகு தன் ஆளிடமே குறை கேட்கிறாராம்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
24-அக்-202115:11:45 IST Report Abuse
SUBBU எரியிற தீயில இன்னும் நல்லா எண்ணெயை ஊற்று.நீ என்னதான் இந்த போலி விவசாயிகளிடம் காரை விட்டு இறங்கி வந்து நீலிக் கண்ணீர் வடித்தாலும் உன்னை பஞ்சாபில் எதிர்க்க பாஜக ஒன்றும் மெனக்கெட தேவையில்லை.உன் கட்சிக்காரனான சித்து வைப்பான் ஆப்பு உனக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X