பொது செய்தி

தமிழ்நாடு

10 சதவீதம் 'போனஸ்' முதல்வர் அறிவிப்பு

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை-தீபாவளியை முன்னிட்டு, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு செய்திக்குறிப்பு:திருத்தப்பட்ட சட்டப்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த, மாதாந்திர சம்பள

சென்னை-தீபாவளியை முன்னிட்டு, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news


அரசு செய்திக்குறிப்பு:திருத்தப்பட்ட சட்டப்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த, மாதாந்திர சம்பள உச்சவரம்பும், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி, 2020 - 21ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். அதாவது, லாபம் ஈட்டிய, நஷ்டம் அடைந்த, அனைத்து அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என, மொத்தம், 10 சதவீதம் வரை வழங்கப்படும்.


latest tamil news


இதனால், நிரந்தரத் தொழிலாளர்கள், 8,400 ரூபாய் பெறுவர். மொத்தம், 2 லட்சத்து, 87 ஆயிரத்து, 250 தொழிலாளர்களுக்கு, 216.38 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
24-அக்-202109:57:16 IST Report Abuse
S.Baliah Seer இதற்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே தமிழக அரசுக்கு செலவாகும். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
24-அக்-202109:48:23 IST Report Abuse
Perumal Thyagu ,romba adi vaangi irruka pola. If you are not capable of getting govt ,then you are useless and you can flee TN.
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
24-அக்-202109:30:02 IST Report Abuse
ganesha இதெல்லாம் நிதி நிலைமையை சீர்தூக்கி நிறுத்த நீங்க அமைச்ச குழுவோடு ஒப்புதலோட இந்த அறிவிப்போ, முன்னாடி அறிவிக்க அறிவிப்போ, இரண்டாயிரத்து ஐநூஓர் ரூபாய்க்கு பூங்கா, ஐநூறு கோடிக்கு கட்சி தலைவர்கள் மற்றும் வெங்காயத்தோட சிலைகள் வைக்கற திட்டத்துக்கும் நிதி நிலைமையை சீர்தூக்கி நிறுத்த நீங்க அமைச்ச குழுவோடு ஒப்புதலோட தான் நடக்கறதா. என்னவோ பெரிய குழு அமைச்சிட்டாங்களாம். இந்த அறிவிப்பை கேட்ட மான ரோஷ வெக்கம் இருக்கறவர்கள் அந்த குழுவில் இன்னும் இருப்பாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X