பொது செய்தி

தமிழ்நாடு

22.33 லட்சம் பேருக்கு 'மெகா' முகாமில் தடுப்பூசி

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை,-'தமிழகத்தில் ஆறாம் கட்ட மெகா முகாமில், 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகத்தில் 50 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட 22.33 லட்சம்பேருக்கு செலுத்தப்பட்டது' என

சென்னை,-'தமிழகத்தில் ஆறாம் கட்ட மெகா முகாமில், 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகத்தில் 50 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட 22.33 லட்சம்பேருக்கு செலுத்தப்பட்டது' என கூறப்பட்டுள்ளது.தடுப்பூசி போடப்படும் மையங்களை, அரியலுார், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் சுப்பிரமணியனும், சென்னையில் செயலர் ராதாகிருஷ்ணனும் ஆய்வு செய்தனர்.

சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மையங்களை ஆய்வு செய்த செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், 1.4 கோடி முதியவர்கள் இருக்கும் நிலையில், 47 லட்சம் பேர் தான் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அதில், 21 சதவீதம் பேர் தான், இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி உளளனர்.


latest tamil news


அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால், முதியோர் மட்டுமின்றி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மெகா முகாமில் தடுப்பூசி செலுத்திய விபரம்முகாம் தேதி பயனாளிகள் செப்., 12 28.91 லட்சம்செப்., 19 16.43 லட்சம்செப்., 26 25.04 லட்சம்அக்., 3 17.04 லட்சம்அக்., 10 22.85 லட்சம்நேற்று 22.33 லட்சம்


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-அக்-202107:12:43 IST Report Abuse
duruvasar அமைச்சர் பாலாஜியைப் போல் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு , தமிழகம் சாதனை பட்டியலில் எப்படி எட்டாத உயரத்தில் இருக்கிறது என அவருக்கே உரிய அவை அடக்கத்துடன் மாசு அய்யா சுட்டிகாட்டியிருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X