கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்று பாதையில் கிடக்கும் கட்டுமான பொருட்களை அகற்ற உத்தரவு

Added : அக் 24, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, எண்ணுார் அனல் மின் நிலையத்துக்காக, கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணியின் போது, கொசஸ்தலை ஆற்று நீர்வழி பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களை, முழுமையாக அகற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எண்ணுார் அனல்மின் நிலையத்துக்கு, நிலக்கரி எடுத்துச் செல்வதற்காக, கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணி நடக்கிறது. கொசஸ்தலை ஆற்றுக்குள் தளம் அமைத்து,

சென்னை : சென்னை, எண்ணுார் அனல் மின் நிலையத்துக்காக, கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணியின் போது, கொசஸ்தலை ஆற்று நீர்வழி பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களை, முழுமையாக அகற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணுார் அனல்மின் நிலையத்துக்கு, நிலக்கரி எடுத்துச் செல்வதற்காக, கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணி நடக்கிறது. கொசஸ்தலை ஆற்றுக்குள் தளம் அமைத்து, கன்வேயர் பெல்டை எடுத்துச் செல்லும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாகவும், சுற்றுச்சூழல் அனுமதி மீறப்படுவதாகவும், காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. இதில், 80 சதவீத பொருட்கள் அகற்றப்பட்டு விட்டதாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:நீர்நிலையில் கொட்டப்பட்ட பொருளில், ஒரு பகுதியை அகற்றி, மீதியை விட்டு செல்வது சரியல்ல. அதனால், நீர்வழி பாதையில் இடையூறு ஏற்படும். எதையும் விட்டு விடாமல், கட்டுமான இடிபாடு பொருட்களை முழுமையாக அகற்ற வேண்டும்.

மின் வாரிய தலைவர் அல்லது முதன்மை நிர்வாக அதிகாரி, இதை ஆராய்ந்து, நீர் நிலையில் கொட்டப்பட்ட பொருட்கள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதுகுறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. விசாரணையை, நவ., 12 க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X