பொது செய்தி

இந்தியா

இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான் ?

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
துபாய்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சுலப வெற்றி பெற காத்திருக்கிறது. எமிரேட்சில் 7வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. முதல் சுற்று முடிந்த நிலையில் 12 அணிகள் மோதும் 'சூப்பர்-12' சுற்று போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'குரூப்-2'ல் இடம் பெற்றுள்ளது. இன்று தனது முதல்


துபாய்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சுலப வெற்றி பெற காத்திருக்கிறது.
latest tamil news


எமிரேட்சில் 7வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. முதல் சுற்று முடிந்த நிலையில் 12 அணிகள் மோதும் 'சூப்பர்-12' சுற்று போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'குரூப்-2'ல் இடம் பெற்றுள்ளது. இன்று தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இம்முறை முன்னாள் கேப்டன் தோனியை 'ஆலோசகராக' கொண்டு இந்தியா களமிறங்குவது கூடுதல் பலம்.


துவக்கம் எப்படி: இந்திய அணிக்கு துணைக் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் துவக்கம் தர உள்ளனர். ஐ.பி.எல்., போட்டிகளில் ஏமாற்றிய ரோகித், பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை தருகிறார். இதேபோல இங்கிலாந்துக்கு எதிராக வேகமாக அரைசதம் அடித்த ராகுலும் ரன்வேட்டைக்கு உதவலாம்.


'மிடில் ஆர்டர்' பலமா: மிடில் ஆர்டரில்' கேப்டன் விராத் கோஹ்லி, 4வதாக சூர்யகுமார் யாதவ் வரவுள்ளனர். பின் வரிசையில் 5, 6வது இடத்தில் ரிஷாப் பன்டுடன், ஹர்திக் பாண்ட்யா வருவார். அடுத்து ஜடேஜா களமிறங்குவார். சமீபத்திய போட்டிகளில் பந்துவீசாத ஹர்திக் பாண்ட்யா எழுச்சி பெறுவாரா அல்லது வேறு வீரருக்கு இடத்தை பறிகொடுப்பாரா என இன்று தெரியும்.latest tamil news


யாருக்கு இடம்: பந்துவீச்சை பொறுத்தவரையில் 'வேகத்தில்' பும்ரா, 'யார்க்கர்' பந்துகளுடன் ரன் வேகத்தையும் கட்டுப்படுத்த காத்திருக்கிறார். இவருக்கு 'சீனியர்' முகமது ஷமி கைகொடுக்கலாம். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் ஷர்துல் தாகூர் இடம் பெறுவார். இதனால் புவனேஷ்வர் குமார் வாய்ப்பு சந்தேகமாக உள்ளது. சுழலில் ஜடேஜா ஒருபக்கமும், அஷ்வின் மறுபக்கமும் மிரட்டலாம். தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி, அணியில் இடம் பெறும் பட்சத்தில் ஐ.பி.எல்., அனுபவத்தை பயன்படுத்தலாம்.


மிரட்டும் பாபர்: பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலமாகவே உள்ளது. துவக்கத்தில் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஜோடி, அடுத்த வரும் பகர் ஜமான் பலம் சேர்க்கின்றனர். 4, 5வது இடத்தில் அனுபவ வீரர்கள் முகமது ஹபீஸ், சோயப் மாலிக் ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறது. இவர்களுடன் ஆபிப் அலி, ஹசன் அலியும் ரன் சேர்க்க உதவுகின்றனர்.


பந்துவீச்சில் 'யார்க்கர்களாக' வீசும் ஷகீன் அப்ரிதி, இமாத் வாசிம் உள்ளனர். சுழலில் ஷாதப் கான், முகமது வாசிம் இந்திய அணியினருக்கு தொல்லை தர முயற்சிக்கலாம். உலக கோப்பை அரங்-கில் இந்-திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீதம் வெற்றி பெற்-றுள்ளது. இந்த வரலாறு இன்றும் தொடரலாம்.


இரு அணிகள்இந்திய அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, ராகுல் சகார், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர்.


பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, 12 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இருந்து போட்டி துவங்குவதற்கு முன் 'லெவன்' அணி அறிவிக்கப்படும்.
பாபர் ஆசம் (கேப்டன்), ஆசிப் அலி, பகார் ஜமான், ஹைதர் அலி, முகமது ரிஸ்வான், இமாத் வாசிம், முகமது ஹபீஸ், ஷதாப் கான், சோயப் மாலிக், ஹாரிஸ் ராப், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிதி.'பிளாஷ்பேக்'
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை தொடர்களின் மறக்க முடியாத சில தருணங்கள்:

* 1992, மார்ச் 4ல் இந்திய அணி விக்கெட் கீப்பராக இருந்தார் கிரண் மோரே. பாகிஸ்தான் அணியின் மியான்தத் பேட்டிங் செய்த போது ஒவ்வொரு முறையும் தவளை போல எகிறிக்குதித்து அவுட் கேட்டார். இதற்காக மோரேயுடன் மோதலில் ஈடுபட்டார் மியான்தத். பின் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியதும், கிரண் மோரே போல மூன்று முறை குதித்தார்.

* 1996ல் பெங்களூருவில் நடந்த காலிறுதியில் தனது பந்தில் பவுண்டரி அடித்த சோகைலை வெறுப்புடன் பார்த்தார் வெங்கடேஷ் பிரசாத். அதற்கு சோகைல், என்னைப் பார்க்கார்காதே, பந்தை பார் என்றார். அடுத்த பந்தில் சோகைல் போல்டானார். இதனால் கோபமாக பார்த்த சோகைலை வெளியே போ என தன் பங்கிற்கு 'சைகை' காண்பித்தார் வெங்கடேஷ் பிரசாத்.

* 2003ல் பாகிஸ்தான் அணி 'வேகப்புயல்' சோயப் அக்தரை நம்பி களமிறங்கியது. இந்தியாவின் சச்சின், அக்தர் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் பின் சிறிது நேரம் அவர் பந்துவீவே இல்லை.100 சதவீத வெற்றிபாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியினர் எப்போதும் சிறப்பாக செயல்படுவர். இதுவரை நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடர்களில் 7 முறை (1992, 1996, 1999, 2003, 2011, 2015, 2019) இரு அணிகளும் மோதின. இவை அனைத்திலும் இந்திய அணி தான் வென்றது.

* அதேபோல 'டி-20' உலக கோப்பை அரங்கிலும் 2007 முதல் இதுவரை மோதிய 5 போட்டியிலும் இந்தியா வென்றது. இது மீண்டும் தொடர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.8 முறை


சர்வதேச 'டி-20' அரங்கில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6, பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. பின், 'சூப்பர் ஓவரில்' இந்தியா வென்றது.254 ரன்


இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். இவர், 6 போட்டியில், 2 அரைசதம் உட்பட 254 ரன் எடுத்துள்ளார். அடுத்த நான்கு இடங்களில் பாகிஸ்தானின் சோயப் மாலிக் (164 ரன்), முகமது ஹபீஸ் (156), இந்தியாவின் யுவராஜ் சிங் (155), காம்பிர் (139) உள்ளனர்.11 விக்கெட்


இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் உமர் குல் முன்னிலை வகிக்கிறார். இவர், 6 போட்டியில், 11 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் இந்தியாவின் இர்பான் பதான் (6 விக்கெட்), பாகிஸ்தானின் முகமது ஆசிப் (5), இந்தியாவின் புவனேஷ்வர் குமார் (5) உள்ளனர்.இம்ரான் சந்திப்பு


பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில்,''பவுலிங் தான் எங்களது பலம். துபாய் வருவதற்கு முன் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தோம். 1992ல் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி உலக கோப்பை வென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ரமீஸ் ராஜா காணொலி மூலம் ஆலோசனை வழங்கினார். களத்தில் அமைதியாக இருந்து நுாறு சதவீத திறமை வெளிப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்,''என்றார்.கோஹ்லி 'சஸ்பென்ஸ்'


கேப்டன் கோஹ்லி கூறுகையில்,''இந்தியா சார்பில் களமிறங்கும் 11 வீரர்கள் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. சமீப காலமாக நிறைய 'டி-20' போட்டிகளில் விளையாடியுள்ளது நமக்கு சாதகம். களத்திற்கு வெளியே வேறுவிதமான சூழல் நிலவலாம். எங்களது மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம். தொழில்ரீதியான கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம்.

பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் அசத்தக்கூடியவர் ஹர்திக் பாண்ட்யா. முதுகு ஆப்பரேஷனுக்கு பின் இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இவருக்கு மாற்று வீரர் 'ஓவர்நைட்டில் கிடைக்க மாட்டார். அணியின் தேவைக்கு ஏற்ப இவரால் இரண்டு ஓவர் பந்துவீச முடியும்,''என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-அக்-202119:06:30 IST Report Abuse
NicoleThomson கிரிக்கெட் ஒரு மோசடியான ஆட்டம் என்பது போல தோன்றுகிறது இடஒதுக்கீட்டில் உள்நுழையும் அரசியல்வியாதிகளின் பேச்சும் இந்த கிரிக்கெட்டும் ஒரே மாதிரி இருப்பதால் , நான் இதனை பார்ப்பதே இல்லை , கருத்து எழுத ஒரு சரியான தளம் என்பதால் வந்து பதிவு செய்கிறேன்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-அக்-202117:30:19 IST Report Abuse
முக்கண் மைந்தன் பொருளாதாரத்துல பாக்கிஸ்தானு, பங்ளாதேசு ரெண்ண்டும் லீடிங்கு ‼️‼️‼️
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
24-அக்-202115:00:37 IST Report Abuse
SUBBU நம் இந்திய அணி பலமானது என்றாலும், மற்ற அணிகளை போல் பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட கூடாது.இந்தியாவில் உள்ள மூர்க்கன்களில் 100% க்கு 99% இன்றைய போட்டியில் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என தொழுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X