கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.பி., ஜாமின் மனு தள்ளுபடி

Added : அக் 24, 2021
Share
Advertisement
கடலுார் : தி.மு.க. எம்.பி., ரமேஷ், ஜாமின் மனு, கடலுார் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜ், கடந்த மாதம் 20ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, தொழிற்சாலை உரிமையாளர் எம்.பி., ரமேஷ் மீது கொலை வழக்கு பதிந்தனர்.கடந்த 11ம் தேதி, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜரான ரமேஷை, 13ம் தேதி

கடலுார் : தி.மு.க. எம்.பி., ரமேஷ், ஜாமின் மனு, கடலுார் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது

.கடலுார் மாவட்டம், பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜ், கடந்த மாதம் 20ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, தொழிற்சாலை உரிமையாளர் எம்.பி., ரமேஷ் மீது கொலை வழக்கு பதிந்தனர்.கடந்த 11ம் தேதி, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜரான ரமேஷை, 13ம் தேதி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.

கடலுார் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 27ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.இந்நிலையில், ஜாமின் கேட்டு கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரமேஷ் மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் மனு விசாரணைக்கு வந்த நிலையில், நேற்று (23ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, நீதிபதி ஜவகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவராஜ், 'எம்.பி., யாக உள்ள ரமேஷ் குற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிந்தும் ஓடி ஒளியாமல் கோர்ட்டில் சரணடைந்தார். வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரம் இல்லை. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் ' என கோரினார்.அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதிடுகையில், 'இந்த வழக்கு தொடர்பாக 43 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோவிந்தராஜ் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே, விசாரணை பாதிக்கும் என்பதால் ரமேஷிற்கு ஜாமின் வழங்க கூடாது' என்றார்.அதேபோன்று, கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் தரப்பு வழக்கறிஞர்களும் ஜாமின் வழங்க கூடாது என, வாதிட்டனர். இதையடுத்து, எம்.பி., ரமேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஜவகர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X