வங்கதேசத்தில் வெகுண்டு எழுந்த ஹிந்துக்கள்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
டாக்கா: வங்க தேசத்தில் சமீபத்தில் 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான செய்திகளை சிலர் பகிர்ந்ததால் வன்முறைகள் அரங்கேறின. ஹிந்துக்கள் குறி வைத்து,தாக்கப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் வங்கதேசத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் 10 ஆயிரம் பேர் திரண்டனர். இது போல் லண்டனிலும் ஹிந்துக்கள் போராட்டம்
 வங்கதேசம், ஹிந்து, போராட்டம் , ஹிந்துக்கள்

டாக்கா: வங்க தேசத்தில் சமீபத்தில் 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான செய்திகளை சிலர் பகிர்ந்ததால் வன்முறைகள் அரங்கேறின. ஹிந்துக்கள் குறி வைத்து,தாக்கப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் வங்கதேசத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் 10 ஆயிரம் பேர் திரண்டனர். இது போல் லண்டனிலும் ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர்.
ஹிந்துக்களுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப் பட்டன. ஹிந்து கோவில்களை அந்த வன்முறையாளர்கள் சூறையாடினர். அங்கிருந்த சுவாமி சிலைகளை உடைத்து, துர்கா பூஜை விழாவை சீர்குலைத்தனர். அந்த வன்முறையில் ஏழு பேர் உயிரிழந்தனர்.இதனை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் பல இடங்களில் நடந்து வருவதால் அந்நாட்டு பிரதமர் ஹசீனா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.


latest tamil news


இந்த வன்முறைக்கு காரணமான இக்பால் உசேன் என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அதில் தொடர்புடைய மற்றொரு நபர் டாக்காவில் கைது செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
25-அக்-202123:24:28 IST Report Abuse
Aarkay ஹவாலா மற்றும் JNU கலகக்காரர்கள் நடிக்கும் விளம்பரங்கள் வந்தால், நாங்கள் சேனல் மாற்றிவிடுவோம். டீகாபிக்கா, அவரின் மெண்டல் கணவர், மற்றும் கான்களின் விளம்பரங்களை நாங்கள் பார்ப்பதேயில்லை. இவர்கள் முன்னிறுத்தும் products-ஐயும் நாங்கள் வாங்குவதில்லை.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
24-அக்-202122:43:32 IST Report Abuse
Aarkay இங்குதான் எங்களுக்கு முதுகெலும்பே இல்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம். எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், ஜடங்களாய் இருப்போம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-அக்-202120:58:26 IST Report Abuse
மலரின் மகள் காஸ்மீரத்து பகுதியில் உதய் வாங்கும் சீனனும் பாகிஸ்தான் கூனனும் வேறு திசை நோக்கி திரும்பி இருக்கிறார்கள். பங்காளதேசத்தில் தங்கள் கைவரிசையை இந்துக்களுக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறார்கள். இதனால் பங்காளதேசமும் பாதிக்கப்படும் என்பதை பங்களதேசத்தவர்கள் உணரவேண்டும். சிறிலங்காவில் விடுதலை புலிகளை ஊக்குவித்தது போல இனி வங்களாதேசம் பாகிஸ்தான் போன்ற தேசங்களில் நாம் அங்குள்ள சிறுபான்மையினரை ஊக்குவிக்கவேண்டும். அவர்களுக்கு நல்ல பயிற்சியும், உதவியும் தந்து சிறப்படைய செய்யவேண்டும். இதனால் அந்த தேசங்களை நமக்கு அஞ்ச செய்யலாம். உள்நாட்டில் நடக்கும் பிரச்சினைகளே உலகில் தீர்க்கமுடியாத மற்றும் தேசத்தை கீழ்நோக்கி கொண்டு செல்லவல்லது, சமாளிக்க முடியாதது. அதை கவனத்தில் இந்தியாவின் உளவு அமைப்புக்களும், ராணுவத்தின் சிறப்பு அமைப்புக்களும் கொள்ளவேண்டும். நாம் இந்திய மண்ணில் பிரச்சினை இல்லாமல் அமைதியாக வாழவேண்டும் என்றால் வடகிழக்கு தேசத்தமும் சரி வட மேற்கு எதிரியும் சரி அவன் தேசத்தின் உள்நாட்டில் திண்டாடிக்கொண்டே இருக்கவேண்டும். பெல்ட் ரோடு சில்க் ரோடு என்று ஏதேதோ இருக்கிறது அதையெல்லாம் கவனிக்கும் விதத்தில் கவனிக்கவேண்டும். நல்லதே நடக்கும் இனி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X