வங்கதேசத்தில் வெகுண்டு எழுந்த ஹிந்துக்கள்| Dinamalar

வங்கதேசத்தில் வெகுண்டு எழுந்த ஹிந்துக்கள்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (48)
Share
டாக்கா: வங்க தேசத்தில் சமீபத்தில் 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான செய்திகளை சிலர் பகிர்ந்ததால் வன்முறைகள் அரங்கேறின. ஹிந்துக்கள் குறி வைத்து,தாக்கப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் வங்கதேசத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் 10 ஆயிரம் பேர் திரண்டனர். இது போல் லண்டனிலும் ஹிந்துக்கள் போராட்டம்
 வங்கதேசம், ஹிந்து, போராட்டம் , ஹிந்துக்கள்

டாக்கா: வங்க தேசத்தில் சமீபத்தில் 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான செய்திகளை சிலர் பகிர்ந்ததால் வன்முறைகள் அரங்கேறின. ஹிந்துக்கள் குறி வைத்து,தாக்கப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் வங்கதேசத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் 10 ஆயிரம் பேர் திரண்டனர். இது போல் லண்டனிலும் ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர்.
ஹிந்துக்களுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப் பட்டன. ஹிந்து கோவில்களை அந்த வன்முறையாளர்கள் சூறையாடினர். அங்கிருந்த சுவாமி சிலைகளை உடைத்து, துர்கா பூஜை விழாவை சீர்குலைத்தனர். அந்த வன்முறையில் ஏழு பேர் உயிரிழந்தனர்.இதனை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் பல இடங்களில் நடந்து வருவதால் அந்நாட்டு பிரதமர் ஹசீனா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.


latest tamil news


இந்த வன்முறைக்கு காரணமான இக்பால் உசேன் என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அதில் தொடர்புடைய மற்றொரு நபர் டாக்காவில் கைது செய்யப்பட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X