பொது செய்தி

தமிழ்நாடு

'வலிமை' சிமென்ட் விரைவில் அறிமுகம்; 'டான்செம்' நிறுவனம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசின் 'டான்செம்' நிறுவனம், 'வலிமை' என்ற பெயரில், புதிய சிமென்டை ஓரிரு வாரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. அரசு செய்திக்குறிப்பு:கடந்த மார்ச் மாதம் தனியார் சிமென்ட் விலை 420 ரூபாய் முதல், 450 ரூபாய் வரை இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் முதல் வாரம், மூட்டை 470 ரூபாய் முதல், 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் தங்கம்

சென்னை : தமிழக அரசின் 'டான்செம்' நிறுவனம், 'வலிமை' என்ற பெயரில், புதிய சிமென்டை ஓரிரு வாரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.



latest tamil news



அரசு செய்திக்குறிப்பு:கடந்த மார்ச் மாதம் தனியார் சிமென்ட் விலை 420 ரூபாய் முதல், 450 ரூபாய் வரை இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் முதல் வாரம், மூட்டை 470 ரூபாய் முதல், 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விலை குறைப்பு தொடர்பாக, தனியார் உற்பத்தியாளர்களுடன் ஜூன் 14ல் பேச்சு நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, மூட்டைக்கு 20 முதல், 40 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. அதனால் மூட்டை சிமென்ட் 420 ரூபாய் முதல், 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற காரணங்களால், இம்மாதம் 6ம் தேதி முதல், ஒரு மூட்டை 470 ரூபாய் முதல், 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மார்ச் மாத விலையுடன் ஒப்பிடுகையில், விலை உயர்வு, 4.7 சதவீதம். எனவே, சிமென்ட் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது உண்மைக்கு புறம்பானது.


latest tamil news




தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை குறைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தற்போது, டான்செம் சிமென்ட் 350 ரூபாய் முதல், 360 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் விற்பனையை அதிகரிக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஓரிரு வாரங்களில், தமிழக அரசின் டான்செம் நிறுவனம், வலிமை என்ற பெயரில் புதிய சிமென்ட் அறிமுகம் செய்ய உள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனம், மாதம் 90 ஆயிரம் டன் அளவிற்கு வெளிச்சந்தையில் அரசு சிமென்டை விற்பனை செய்கிறது.இதனுடன், குறைந்த விலையில், நிறைந்த தரத்தில் வலிமை சிமென்ட், முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் டன் என்ற அளவில் விற்கப்பட உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
24-அக்-202120:53:14 IST Report Abuse
Sankar Ramu அரசு சிமெண்ட் பெயர்ச ராசி இல்லையா? அறிவு ஜீவிகளே?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-அக்-202120:12:21 IST Report Abuse
வெகுளி அண்ணாத்தே சிமென்ட் வந்திருந்தா ... ஜஸ்ட் எஸ்கேப்பு....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-அக்-202119:51:38 IST Report Abuse
வெகுளி சாராயம் காய்ச்சுவது சிமெண்ட் விப்பதெல்லாம் அரசின் வேலையா மங்குணிகளே என்று தமிழன் கேட்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X