'கீறல் விழுந்த ரிக்கார்டு'ன்னு சொல்வாங்களே... அந்த தட்டை தமிழகம் முழுக்க போட்டுக் கேட்டு, அலுத்து போச்சு...

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு, முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'கீறல் விழுந்த ரிக்கார்டு'ன்னு சொல்வாங்களே... அந்த தட்டை தமிழகம் முழுக்க போட்டுக் கேட்டு, அலுத்து போச்சு... 26ம் தேதிக்குப் பிறகு, இந்த நிலை மாறும்ன்னு நம்பலாமா!மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
அழகிரி, மா.சுப்ரமணியன், நாராயணன்_திருப்பதி, பொன்முடி

தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு, முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'கீறல் விழுந்த ரிக்கார்டு'ன்னு சொல்வாங்களே... அந்த தட்டை தமிழகம் முழுக்க போட்டுக் கேட்டு, அலுத்து போச்சு... 26ம் தேதிக்குப் பிறகு, இந்த நிலை மாறும்ன்னு நம்பலாமா!



மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி: சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில், கொரோனாவின் அடுத்த அலை ஆரம்பமாகி விட்டது; பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு குறைவதால், மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டக் கூடாது.


மக்கள் கவனமாக இருப்பதாலும், ஊசி போட்டுக் கொள்வதாலும் தானே சார், இங்கே இவ்வளவு கட்டுப்பட்டிருக்கு... நம் மக்கள் கவனமா இருப்பாங்க சார்... பயப்படாதீங்க!



தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை: 100 கோடிக்கு மேல் மக்கள் வாழும் நாடுகள் உலகத்தில் இரண்டே இரண்டு தான். அவை, சீனாவும், இந்தியாவும். இதில், 100 கோடி தடுப்பூசி போட்டு இரண்டாம் இடம் பிடித்தது சாதனையாம். ரெண்டு பேர் ஓடி, அதில் இரண்டாம் இடம் பிடித்தது சாதனையா?


சீனாவில் எதிர்க்கட்சிகளே கிடையாது. ஆனால், நம் நாட்டில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது சாதனை தானே!



போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி: டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்கள் பாதித்தாலும், பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை.


'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என பாடத் தோன்றுகிறது!



மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொது செயலர் சுப்ரமணியன் பேச்சு: தீபாவளி 'போனஸ்' தொடர்பாக, அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து, நிர்வாகம் சார்பில் பேச்சு நடத்தப்படும். ஆனால், இந்த முறை பேச்சு நடத்துமாறு, பல முறை வலியுறுத்தியும் அழைப்பு விடுக்கவில்லை. ஏற்னவே பல முறை, 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, அதை விட குறைந்த அளவு அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. அரசின் அணுகுமுறை சரியில்லை.


தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால், பிரச்னை பெரிதாகும் என அரசு நினைத்திருக்கலாம்!



நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு: அகலமான பல தடங்கள் கொண்ட சாலைகள் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுவதால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் போதே விபத்து ஏற்படாத வகையில் சாலையை வடிவமைக்க வேண்டும்.


எல்லா 'டும்'களும் 'ஓகே' தான். நடக்கணுமே!



தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தியது, தி.மு.க., ஆனால், தமிழகத்தில் அதே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்தியதன் காரணம் என்ன... தமிழக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி தேவையில்லையா?


latest tamil news




தி.மு.க.,வின் நெருங்கிய கூட்டணி கட்சி காங்கிரஸ். மாநிலத்திற்கு மாநிலம் மாறும் கொள்கை கொண்ட காங்., போல, தி.மு.க., மாற்றிக் கொள்கிறதோ?



தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை: அரசு சார்பில் வைக்கப்படும் தலைவர்களின் சிலைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என, முந்தைய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படியே, சென்னையில் உள்ள ஜெயலலிதா சிலையை பராமரித்து வருகிறோம். அடுத்த ஆண்டு பிப்., 24 அன்று, அவரின் பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.


சிலை சரியாக பராமரிக்கப்படாததால், அ.தி.மு.க.,விடம் ஒப்படைக்க, அக்கட்சி கோரியுள்ளது. உயிருடன் இருந்த வரை, தி.மு.க., அவர் மீது காட்டமாக இருந்தது. ஜெயலலிதா இறந்த பிறகும் இவ்வளவு காட்டம் வேண்டுமா?



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை: பேரிடர் காலத்தில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய எங்களின் அரசு மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன் அளித்துள்ளன. அதை பலரும் பாராட்டியுள்ளனர் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.


பேரிடர் காலத்தில் உண்மையிலேயே மிகத் திறமையாக நீங்கள் செயல்பட்டீர்கள் என்பது, மக்கள் அனைவருக்கும் தெரியும். அதை மனதில் வைத்து தான், இந்த அரசும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் செயலாற்றி வருகிறது. காலரைத் துாக்கி விட்டுக்குங்க!



மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு: முந்தைய அ.தி.மு.க., அரசின் பல தவறான திட்டங்களை, இப்போதைய தி.மு.க., அரசு மாற்றியுள்ளது. அந்த வகையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், கட்டணம் இன்றி இலவசமாக மக்கள் குடியேற அனுமதிக்க வேண்டும்.


இலவச வீடு என அறிவித்து விட்டு, 1.5 லட்ச ரூபாய் கேட்டால், மக்கள் எங்கே போவர் என்கிறீர்கள். நியாயம் தான். இலவசமாக கொடுக்கட்டுமே!



தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேச்சு: கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசு அறிவித்து உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய கொரோனா தளர்வுகளை மக்கள் கவனமாக பின்பற்ற வேண்டும்.


இப்படி அவ்வப்போது அபாயச் சங்கு ஊதிக் கொண்டிருந்தால் தான், கொரோனா இன்னும் ஒழியவில்லை என்பது மக்களின் ஞாபகத்திற்கு வரும்!


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-அக்-202120:38:08 IST Report Abuse
Kasimani Baskaran காங்கிரசும் திமுகவும் ஒருவருக்குள் ஒருவராகி இன்று ஆட்சியில் கூட காங்கிரஸ் இருப்பதாக பல காங்கிரஸ் மேதைகள் நினைத்துக்கொண்டு மற்றவர்கள் மீது நாகரீகத்தில் எல்லையைக்கடந்து வந்து சேற்றை இரைக்கிறார்கள்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
24-அக்-202120:36:25 IST Report Abuse
r.sundaram குடிசை மாற்று வாரியத்தால் இலவசமாக குடியிருப்புகள் கொடுக்கப்பட்டாலும், பயனாளிகள் அதை வாடகைக்கு விட்டு பணம் பண்ணுவார்கள் தவிர அதில் குடியேறி, குடிசைகளை விட்டு மாற மாட்டார்கள். குடிசை மாற்று வாரியம் இத்தனை ஆண்டுகள் வீடுகள் கட்டி கொடுத்தான் இன்னமும் குடிசை இல்லா தமிழகம் வர வில்லை என்றால் அதற்க்கு இதுவே காரணம். அரசியல் எப்படி ஊழல்கள் இல்லாமல் இல்லையோ, அதுபோலவே குடிசைவாழ் மக்களும், குடிசை இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-அக்-202115:12:24 IST Report Abuse
vbs manian நூறு கோடி ஊசி போட்டு சாதனை புரிந்த மோடியை பார்த்து சங்கிரஸ் என்னமாய் வயிற்றெரிச்சல் படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X