'சாட்சிக்கு சந்தேகம் வந்தால் சாட்சியத்தை ஏற்க முடியாது'

Added : அக் 24, 2021
Share
Advertisement
புதுடில்லி : கேரள மாநிலத்தில் கள்ளச் சாராயம் கடத்தியதாக நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதிகள் அஜய்ரஸ்தோகி, அபய் ஓகா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:ஒரு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை, முதல் முறையாக பார்த்தவர் அளிக்கும் சாட்சியம் எப்போதும் வலுவானதாக இருக்காது. அதுவும் சம்பவம் நடந்ததற்கும்,

புதுடில்லி : கேரள மாநிலத்தில் கள்ளச் சாராயம் கடத்தியதாக நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதிகள் அஜய்ரஸ்தோகி, அபய் ஓகா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:

ஒரு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை, முதல் முறையாக பார்த்தவர் அளிக்கும் சாட்சியம் எப்போதும் வலுவானதாக இருக்காது. அதுவும் சம்பவம் நடந்ததற்கும், விசாரணைக்கும் இடைப்பட்ட காலம் நீண்டதாக இருக்கும்போது, அந்த சாட்சியத்தை ஏற்க முடியாது.இந்த குறிப்பிட்ட வழக்கில், நேரில் பார்த்ததாக கூறும் சாட்சி, 11 ஆண்டுகளுக்குப் பிறகே, குற்றவாளிகளை பார்த்துள்ளார். அதனால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என கூறியுள்ளார். அதே நேரத்தில், நான்கு பேரில் இரண்டு பேரின் அடையாளம் தெரியும் என்று கூறியுள்ளார்.குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சாட்சிக்கு சந்தேகம் உள்ளதால் அவருடைய சாட்சியத்தை ஏற்க முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X