ஆதித்யநாத் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: 7 போலீஸார் சஸ்பெண்ட்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் முதல்வர் ஆதித்யநாத் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் பங்கேற்ற சம்பவத்தில் 7 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார். இதனை முன்னிட்டு அந்த அரங்கை சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ்
Uthar Pradesh, Cm Adithyanath, Function, Gun Man, 7 Police suspend, உத்திரபிரதேசம், ஆதித்யநாத் நிகழ்ச்சி, துப்பாக்கி நபர், 7 போலீஸார் சஸ்பெண்டு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் முதல்வர் ஆதித்யநாத் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் பங்கேற்ற சம்பவத்தில் 7 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார். இதனை முன்னிட்டு அந்த அரங்கை சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பல அடுக்கு சோதனைகளுக்கு பிறகே பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.


latest tamil news


நிகழ்ச்சி தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன் அரங்குக்குள் கடைசி கட்ட சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு நபர், கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

விசாரணையில், அவர் பஸ்தி பஞ்சாயத்து தலைவரின் உறவினர் ஜிதேந்திர பாண்டே என்பதும், அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் பெற்றிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீசாரை பஸ்தி மாவட்ட போலீஸ் எஸ்.பி,, ஆசிஷ் வஸ்தவா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் முதல்வர் ஆதித்யாத் பங்கேற்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
24-அக்-202120:46:02 IST Report Abuse
Sankar Ramu தமிழக சட்ட ஒழுங்க பத்தி எந்த பத்திரிக்கையும் பேசுவதில்லை. பி ஜே பி ஆட்சி மாநிலத்தில் மட்டுமே பத்திரிக்கைகள் சுதந்திரமாக எழுதுகின்றன.
Rate this:
Cancel
Krishnan - Coimbatore ,இந்தியா
24-அக்-202114:33:27 IST Report Abuse
Krishnan துப்பாக்கியோடு உள்ளே வந்ததற்கே 7 போலீஸ் சஸ்பெண்ட், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக்கேசுல எல்லாருக்கும் ஆயுள் தண்டனை எல்லாரும் சுக வாழ்க்கை, so, உனக்கு வந்தா ரத்தம், அவருக்கு வந்தது தக்காளி சட்னி. நேரம்டா.....
Rate this:
Balaji - Chennai,இந்தியா
24-அக்-202119:49:58 IST Report Abuse
Balajiஎல்லாத்துக்கும் மோடியை குறை கூறாதீர்கள்......
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
24-அக்-202113:03:11 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் டீம்கா அல்லக்கைஸ் யாருமே கருத்து சொல்ல வரலையே ?
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
24-அக்-202114:02:58 IST Report Abuse
Rajaஒரு வேலை அவங்க நம்மள போல வெட்டியா இல்லை போலிருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X