புது உத்வேகத்துடன் இந்தியா முன்னேறுகிறது: பிரதமர் மோடி

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து, நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறி செல்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மனதின் குரல் என்ற தமிழாக்கம் கொண்ட மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று தனது இந்திய நாட்டு நடப்புகள் குறித்த கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். மத்திய அரசு மேற்கொண்டிருக்கும்
Maankibaat, Pmmodi, narendramodi, India, vaccine, Primeminister, பிரதமர்மோடி, நரேந்திர மோடி, பிரதமர், மோடி, பிரதமர்நரேந்திர மோடி, மன்கி பாத், மனதின் குரல், தடுப்பூசி, இந்தியா, நாடு, தேசம்,

புதுடில்லி: 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து, நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறி செல்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மனதின் குரல் என்ற தமிழாக்கம் கொண்ட மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று தனது இந்திய நாட்டு நடப்புகள் குறித்த கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகள் சர்வதேச அளவில் இந்தியர்களின் சாதனைகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரது சாதனைகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது பிரதமர் மோடி தனது உரையின்போது பாராட்டுவது வழக்கம். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, 82வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
*100 கோடி தடுப்பூசி இந்தியாவின் பெருமை மிக்க தருணம். இதன் மூலம் தேசம் புதிய உற்சாகத்துடன் முன்னேறி செல்கிறது. நமது தடுப்பூசி திட்டத்தின் வெற்றியானது, இது இந்தியாவின் சக்தியை உலகிற்கு எடுத்து காட்டியது. அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தை பிரதிபலிக்கிறது.

*எனது நாட்டு மக்களின் திறமை எனக்கு தெரியும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த ஒரு வாய்ப்பையும் நமது சுகாதார ஊழியர்கள் தவறவிடவில்லை என்பதையும் நான் அறிவேன். நமது சுகாதார ஊழியர்கள், தங்களுடைய கடுமையான உழைப்பாலும், மன உறுதிப்பாட்டாலும் ஒரு புதிய முன்மாதிரியை ஏற்படுத்தி உள்ளனர்.

*தடுப்பூசி திட்டத்தின் பின்னணியில் எண்ணற்ற தன்னம்பிக்கை கதைகள் அடங்கி உள்ளன.


latest tamil news*இந்தியா எப்போதும் உலக அமைதிக்காக பணியாற்றி உள்ளது. வறுமை ஒழிப்பு, தொழிலாளர் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பூமியை, வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

*வரும் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினத்தை நாம் கொண்டாடுகிறோம். அன்றைய தினம், தேசத்தின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்தும் ஏதேனும் ஒரு நடவடிக்கைகளில் நம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

*பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால், ஏழை வியாபாரிகள் வீட்டில் பிரகாசம் ஏற்படும்.

*போலீசில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2014ல் 1.05 லட்சமாக இருந்தது. இது தற்போது 2.15 லட்சமாக அதிகரித்துள்ளது. பெண் போலீசார், இளம்பெண்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றனர்.

*போக்குவரத்திற்கும், வீடுகளில் பொருட்கள் விநியோகத்திற்கும், அவசர காலங்களில் உதவி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் டுரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நாடு முயற்சி செய்து வருகிறது. அனைத்து தேவைகளுக்கும் ஏற்ப டுரோன்கள் களமிறக்கப்படும். கோவிட் தடுப்பூசி விநியோகத்திற்கு டுரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இளைஞர்களை அது பெரிதும் கவர்வதுடன், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்த துவங்கி உள்ளன.டுரோன் குறித்த புதிய கொள்கை சிறந்த முடிவுகளை தர துவங்கி உள்ளது.

* ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும். அனைவரும் இணைந்து நமது நாட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news

* சுகாதார பணியாளருடன் கலந்துரையாடல்


இந்த உரையின் போது உத்தர்கண்டை சேர்ந்த சுகாதார பணியாளருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


முக்கியப் பங்கு வகிக்கும் இந்திய பெண்கள்


மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக அமைதிக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஐ.நா., உறுப்பு நாடுகளில் இந்தியா திறம்பட செயல்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரே, கடந்த 1945ஆம் ஆண்டு ஐ.நா.,வில் இந்தியா இணைந்தது. அப்போது முதல் அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
ஐ.நா.,வின் சக்தியை அதிகரிப்பதில் இந்திய பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அங்கு, சர்வதேச அளவில் இந்தியாவின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவிலிருந்து பெண்கள் பலர் பணியாற்றி வருவதன் மூலமாக கடந்த 50 ஆண்டுகளாக ஐ. நா., வின் ஆற்றல், அதிகாரம் அபரிமிதமான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
24-அக்-202123:34:14 IST Report Abuse
abdulrahim பொது சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதில் முன்னேறுவதை சொல்லுது தருதலை, அம்பானி அதானி ஆசியாவிலேயே பணக்கார வரிசையில் முன்னேறுவதை சொல்றார், வாழ்க்கையில வட சுட்டே காலத்த ஓட்டுவதில் கில்லாடி....
Rate this:
Cancel
24-அக்-202121:52:36 IST Report Abuse
முருகன் எங்களுக்கு தேவை வேலைவாய்ப்பு, கல்வி , மருத்துவம் , அதனை கொடுக்க முடியுமா இந்த அரசால். எரி பொருள் விலையை ஜிஎஸ்டி குள் கொண்டு வருவதற்கு ஏன் இந்த தயக்கம்.
Rate this:
Cancel
Gs nathan - Chennai,இந்தியா
24-அக்-202120:17:28 IST Report Abuse
Gs nathan ஐயா... தமிழ் நாட்டு அரசியலை புரிந்துகொள்ளுங்கள் எங்கள் விருப்பம் என்னவென்றால் மந்திரிமார்கள் ஊழல் செய்யவேண்டும்,,,,,, முக்கியமா குடும்ப அரசியல் வேண்டும் அப்பா மகன் மகள் பேரன்,,,,மற்றும் கிளை குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இருக்க வேண்டும்...மண்டியிட்டு வாழ ஏதாவது ஒரு காலடிவேன்றும்,,,,, நாங்கள் அம்பானியை அதானியை பற்றி பேசுவோம், ஆனால் மறந்தும் suntv கலாநிதி, redgiantmovie உதயநிதிக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்ததுன்னு கேட்கமாட்டோம்,,,,,, ஐயா மோடி அவர்களே நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பது எங்கள் பிரச்சனைஇல்லை,,,, எங்களால் ஊழல் செய்ய முடியவில்லலை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X