செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்., நிர்வாகி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்., நிர்வாகி கைது

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (39)
Share
கோவை: கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை குணியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் செல்வம் மளிகைக்கடையில் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து சென்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை
கோவை, செயின்பறிப்பு, காங்கிரஸ், நிர்வாகி, கைது,

கோவை: கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குணியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் செல்வம் மளிகைக்கடையில் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து சென்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞ்ர் அணி துணை தலைவரான கரும்புக்கடை பகுதியை சேர்ந்த பைசல் ரஹ்மான் என்ற வட பைசல், மற்றும் அவனது கூட்டாளியான சிக்கந்தர் ஆகியோரை குணியமுத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X