பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛மதுரை, வேலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.வட கடலோர தமிழகத்தில் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்., 24): வேலுார், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி,
tamilnadu, 8 district, heavyrain, vhennai, Weather, report, தமிழகம், 8 மாவட்டங்கள், கனமழை, சென்னை வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛மதுரை, வேலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

வட கடலோர தமிழகத்தில் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக


latest tamil news


இன்று (அக்., 24): வேலுார், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (அக்., 25): புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


ஏற்காடு (சேலம்) 10 செ.மீ.,
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 9 செ.மீ.,
பந்தலுார் (நீலகிரி) 8 செ.மீ.,
பெரியார் (தேனி), சின்னக்கல்லார் (கோவை), கலசபாக்கம் (திருவண்ணாமலை) தலா 7 செ.மீ.,
திருவண்ணாமலை, அமராவதி அணை (திருப்பூர்) தலா 6 செ.மீ.,
தாராபுரம் (திருப்பூர்), கீழ்பென்னாத்துார் (திருவண்ணாமலை), கொடைக்கானல் (திண்டுக்கல்) ஸ்ரீவில்லிபுத்துார் (விருதுநகர்), ராமநாதபுரம், மலைய;ர் (புதுக்கோட்டை) ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 5 செ.மீ.,

குறிப்பு: வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவக்காற்று துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை:



அரபிக்கடல் பகுதிகள்:


இன்று (24ம் தேதி) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X