கூடுதல் வட்டி கேட்ட 4 பேர் மீது வழக்கு| Dinamalar

கூடுதல் வட்டி கேட்ட 4 பேர் மீது வழக்கு

Added : அக் 24, 2021 | |
கரூர்: கரூர் அருகே அதிக வட்டி கேட்டதாக நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் காந்தி கிராமம் அங்கு நகரை சேர்ந்தவர் ராஜரத்தினம், 69; இவருடைய மனைவி மகேஸ்வரி, 55; இவர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த வாசுகி, 44, என்பவரிடம், செக் மற்றும் புரோ நோட் கொடுத்து, ஐந்து சதவீத வட்டிக்கு ஐந்து லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், கூடுதல் வட்டி கேட்டு

கரூர்: கரூர் அருகே அதிக வட்டி கேட்டதாக நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் காந்தி கிராமம் அங்கு நகரை சேர்ந்தவர் ராஜரத்தினம், 69; இவருடைய மனைவி மகேஸ்வரி, 55; இவர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த வாசுகி, 44, என்பவரிடம், செக் மற்றும் புரோ நோட் கொடுத்து, ஐந்து சதவீத வட்டிக்கு ஐந்து லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், கூடுதல் வட்டி கேட்டு வாசுகி, பழனிசாமி, சங்கர், மேரி ராணி ஆகியோர் ராஜ ரத்தினம் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, போலீசில் ராஜ ரத்தினம் புகார் செய்தார். இதையடுத்து, வாசுகி உள்பட நான்கு பேர் மீது பசுபதிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X