காஷ்மீரில் வளர்ச்சிக்கான சகாப்தம் துவக்கம்: அமித்ஷா

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஜம்மு: ‛‛ காஷ்மீரில் வளர்ச்சிக்கான சகாப்தம் துவங்கியுள்ளது. அதற்கு யாரையும் இடையூறு செய்ய அனுமதிக்க மாட்டோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு 3 நாள் பயணமாக நேற்று வந்த பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.அப்போது அவர்
amitshah, kashmir, jammu kashmir, home minister, development, hmamitshah, அமித்ஷா, காஷ்மீர், ஜம்மு காஷ்மீர், உள்துறை அமைச்சர்,

ஜம்மு: ‛‛ காஷ்மீரில் வளர்ச்சிக்கான சகாப்தம் துவங்கியுள்ளது. அதற்கு யாரையும் இடையூறு செய்ய அனுமதிக்க மாட்டோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு 3 நாள் பயணமாக நேற்று வந்த பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி நீக்கப்பட்டுள்ளது. இனிமேல் யாரும் உங்களுக்கு அநீதி இழைக்க முடியாது என்ற செய்தியை உங்களிடம் சொல்ல ஜம்மு வந்துள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்ய முயற்சி செய்கின்றனர். காஷ்மீரில், வளர்ச்சிக்கான சகாப்தம் துவங்கி உள்ளது. இதனை யாரும் தடுக்க முடியாது. அதனை செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம். இந்த நிலம், கோவில்களின் நிலம், மாதா வைஷ்ணவ தேவி, பிரம்நாத் தோக்ரா கோயில் இங்கு உள்ளது. ஷியாமா பிரசாத் முகர்ஜி உயிர் தியாகம் செய்த மண் இது. காஷ்மீரின் அமைதிக்கு இடையூறு செய்பவர்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம்.


latest tamil news


புதிதாக தொழிற்கொள்கையை நாங்கள் அறிமுகம் செய்த போது, இங்கு முதலீடு செய்ய யார் வருவார்கள்? என 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், பிரதமரின் முயற்சி காரணமாக ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு தற்போது வரை வந்துள்ளது. 2022க்குள் இன்னும் ரூ.51 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சிலர் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். கடந்த 2004 முதல் 2014 வரை 2,081 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டிற்கு 208 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், 2015 முதல், 2021 செப்., வரை 239 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால், நாங்கள் அதில் திருப்தியடையவில்லை. யாரும் உயிரிழக்காத நிலையை உருவாக்கவும், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவுமே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
24-அக்-202122:47:33 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் பாகிஸ்தானின் இந்திய விசுவாசிகளுக்கு ஏன் இவர் அதிர்ச்சியை கொடுக்கிறார்? இதை திராவிடர்கள் தட்டிக் கேட்கவேண்டும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-அக்-202120:15:45 IST Report Abuse
sankaseshan காஷ்மீரும் நாட்டின்ஒரு பகுதி போக்குவரத்துக்கு புதிய பாலங்கள் சாலைகள் ரயில் பாதைகள் அமைக்க பட்டுள்ளன இதுதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி 70 ஆண்டுகலில்செய்யாதது நடந்திருக்கிறது ,கண்ணை காதையும் மூடிக்கொண்டா ஒன்றும் தெரியாது
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-அக்-202119:08:13 IST Report Abuse
Dhurvesh வேறு யாரும் அநீதி இழைக்க முடியாது. அதுக்குத்தான் நாங்க இருக்கோமே என்கிறாரா?
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
24-அக்-202119:37:03 IST Report Abuse
தியாகு காஸ்மீரை பற்றி பேசினால் சாருக்கு கோபம் வருது பாருங்க. பாசம் இல்லாமலா இருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X