பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, திருச்சி உட்பட 48 கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு விரைவில் துவக்கம்: அறநிலையத்துறை

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருச்சி, மதுரை உட்பட 48 கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் சுவாமியை விரைவில் தரிசிக்கலாம்,'' என அறநிலையத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொரோனா பெருந்தொற்று காரணமாக பிரசித்தி பெற்ற கோயில்களான சென்னை வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை
மதுரை, திருச்சி, 48 பிரசித்திபெற்ற கோவில்கள், ஆன்லைன் முன்பதிவு, விரைவில் துவக்கம், அறநிலையத்துறை

சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருச்சி, மதுரை உட்பட 48 கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் சுவாமியை விரைவில் தரிசிக்கலாம்,'' என அறநிலையத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பிரசித்தி பெற்ற கோயில்களான சென்னை வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்துார் முருகன் கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.


latest tamil news


ஆனால், பக்தர்கள் இன்றி அனைத்து கோயில்களிலும் ஆகம விதிகளின்படி நாள்தோறும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. பிறகு படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மக்கள் கூட்டம் கூடாதவாறு கோயில்கள் மூடப்பட்டன. பிறகு கடந்த 15ம் தேதி முதல் அனைத்து நாட்களும் கோயில்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்தாலும் முழுமையாக இன்னும் நீங்கவில்லை. ஆகையால், பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடாமல் இருக்க ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை துவக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 48 கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் கூட்டம் கூடாமல் சிரமமின்றி சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

படிப்படியாக ஆன்லைன் முன்பதிவு நீடிக்கப்பட்டு அனைத்து முக்கியமான கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்தில் கோயில்களுக்கு வந்து செல்லலாம் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-அக்-202122:15:48 IST Report Abuse
Natarajan Ramanathan தயவுசெய்து ஹிந்துக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பணத்தை இழக்காமல் முடிந்தால் நேரில் சென்று உண்டியல் மற்றும் கட்டண தரிசனத்தை தவிர்த்து கடவுளை தரிசனம் செய்யுங்கள். அல்லது ஆன்லைனிலேயே தரிசனமும் செய்து விடுங்கள். எந்த சூழ்நிலையிலும் ஒத்த ரூபாய்கூட அரசுக்கு கொடுக்காதீர்கள்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-அக்-202119:55:30 IST Report Abuse
வெகுளி கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கும் கேவலத்தை செய்யாதீர்கள்.....
Rate this:
Cancel
24-அக்-202119:29:19 IST Report Abuse
ஆரூர் ரங் அரசியல் சட்டவிரோதமாக ஹிந்து ஆலயங்களை ஆக்கிரமித்திருக்கும்👹 அறமில்லாததுறையை விரட்டுவது நம் கடமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X