ஆர்யன்கான் வழக்கில் திருப்பம்: வெற்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கியதாக சாட்சி புகார்| Dinamalar

ஆர்யன்கான் வழக்கில் திருப்பம்: வெற்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கியதாக சாட்சி புகார்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (27)
Share
புதுடில்லி: கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தன்னிடம் வெற்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கியதாக சாட்சியாக சேர்க்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் ஆகியோர் சாட்சியாக
ஆர்யன்கான், போதைப்பொருள், சாட்சி,

புதுடில்லி: கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தன்னிடம் வெற்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கியதாக சாட்சியாக சேர்க்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் ஆகியோர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். ஆர்யன் கைது செய்யப்பட்ட அன்று, அவருடன் கோசவி எடுத்த செல்பி புகைப்படம் வைரலானது. இதன் மூலம் கோசவி பிரபலமடைந்தார்.


latest tamil news


இந்த வழக்கில் பிரபாகர் தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறப்பட்டு உள்ளதாவது: போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூத்த அதிகாரி சமீர் வான்கடே மற்றும் கோசாவி இருவரும் கூட்டாக சதி செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னிடம் வெற்று ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். நான் காரில் அமர்ந்திருந்த போது, சாம்டி சூசா என்பவரிடம் ரூ.18 கோடி அளவுக்கு போன் மூலம் கோசவி பேரம் பேசியதை நான் கேட்டேன். அதில், ரூ.8 கோடி சமீர் வான்கடேவிடம் வழங்கப்பட்டு விட்டது.


latest tamil news


கோசாவியிடம் இருந்து பணம் பெற்று, சாம் டி சூசாவிடம் நானே நேரில் சென்று, டிரிடன்ட் ஓட்டல் அருகேயுள்ள பகுதியில் ஒப்படைத்தேன். அப்போது பணம் எண்ணப்பட்ட போது, அதில் ரூ.38 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. கோசாவி மாயமாகி உள்ளார். அவரது வாழ்க்கைக்கும், சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த அபிடவிட்டை தாக்கல் செய்கிறேன்.

கடந்த 2ம் தேதி சொகுசு கப்பலின் வரவேற்பு அறையில் இருந்தபோது, கப்பலில் உள்ளவர்களை அடையாளம் காட்டும்படி என்னிடம் தெரிவித்தனர். இதற்காக நான் வாட்ஸ் ஆப் மூலம் படங்களை அனுப்பினர். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு என்னிடம் வெற்று ஆவணங்களில், கோசவியும், சமீர் வான்கடேவும் கையெழுத்து வாங்கினர் என அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. பணம் கைமாறி இருந்தால், சிலர் ஏன் சிறைக்கு சென்றுள்ளனர். விசாரணை அமைப்பின் பெயரை கெடுப்பதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அக்., 2 முன்பு வரை பிரபாகரை சந்தித்தது இல்லை. அதுவரை அவர் யார் என்றே தெரியாது. போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த அபிடவிட் மீது விசாரணைக்கு வரும் போது உரிய பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X