பொது செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்ட ரயில்களின் நேரம் நவ.,1ம் தேதி முதல் மாற்றம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை: ‛‛மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் நேரம் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது,'' என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது: தென்மாவட்ட ரயில்களின் நேரம் கடந்த 1ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மேலும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நவ., 1ம் தேதி முதல்
தென்மாவட்டம், ரயில்கள், நேரம், நவம்பர் 1ம் தேதி, மாற்றம், மதுரை, கோட்ட ரயில்வே, அறிவிப்பு

மதுரை: ‛‛மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் நேரம் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது,'' என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது: தென்மாவட்ட ரயில்களின் நேரம் கடந்த 1ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மேலும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நவ., 1ம் தேதி முதல் புனலூர் - மதுரை சிறப்பு ரயில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.


latest tamil news


சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 11.05 மணிக்கும், மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லம் - சென்னை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். கோவை - நாகர்கோவில் நள்ளிரவு சிறப்பு ரயில் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கும், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கும் புறப்படும்.

மதுரை - ராமேசுவரம் சிறப்பு ரயில் நவ., 4ம் தேதி முதல் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7.15 மணிக்கும், சூடியூரில் இருந்து இரவு 7.25 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.40 மணிக்கும், சத்திரக்குடியில் இருந்து இரவு 7.56 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கும், உச்சிப்புளியில் இருந்து இரவு 8.32 மணிக்கும், மண்டபத்தில் இருந்து இரவு 8.52 மணிக்கும், பாம்பனில் இருந்து இரவு 9.10 மணிக்கும் புறப்படும். இரவு 10.10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

புவனேசுவர் - ராமேசுவரம் சிறப்பு ரயில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.25 மணிக்கும், ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7.55 மணிக்கும் புறப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
25-அக்-202110:12:20 IST Report Abuse
தமிழ்வேள் 2020 ஆம் ஆண்டிலிருந்து டைம் டேபிள் விற்பனை இல்லை ...வெறும் பிரஸ் ரிலீஸ் களோடு ரயில்வே நிறுத்திக்கொண்டுள்ளது ...2021 ஆம் ஆண்டு டைம் டேபிளாவது பிரிண்ட் இல் விற்பனைக்கு வரவேண்டும் ....சென்னை சப் அர்பன் ரயில் டைம் டேபிளும் வெளிவரவில்லை ...[இதனை ஐந்து ரூபாய் விலைக்கு பதில் பத்து ரூபாய் விலையில் அனைத்து சப் அர்பன் ரயில் ஸ்டேஷன்களிலும் விற்பனை செய்யலாம் ..டிமாண்ட் அதிகம் ஆனால் விற்பனைக்கு பிரதிகள் வருவதில்லை ]
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-அக்-202120:52:17 IST Report Abuse
மலரின் மகள் ஆகா செய்தியை படித்தல் எந்த ரயிலுமே அது பெயர் தாங்கிய ஊருக்கு போகாதா? அது என்ன கிண்டல் என்று தெரியவில்லை, உண்மையை பறைசாட்டுர்வதாக, தமிளக ரயில்கள் என்றால் அரத பலசாகவும் வடமாநில ரயில்கள் என்றால் தேஜஸ் ரயில் போட்டாக்களாகவும் தெரிந்தெடுத்து பிரசுரிக்கிறீர்கள். போட்டோகிராபர் அருமையாக பேசுகிறார். வாழ்த்துகள். பி.கு: //ஒட்டன்சத்திரம் - பழநி பைபாஸ் ரோட்டில் தண்ணீர் ஓடுவது போல கண்ணுக்கு தெரிந்த துாரம் வரை கானல் நீர் காட்சியளித்தது//. //மழைநீர் அல்ல.. கானல் நீர்... : மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் குறையவில்லை என்பதற்கு சாலையில் தென்பட்ட கானல் நீரே சாட்சி. இடம்: தேனி மாவட்டம் க.விலக்கு - வருஷநாடு ரோடு.// தத்ரூபமான படங்கள். நம்பவே முடியவில்லை கானல் நீர் என்று சொல்வதை. நன்கு மலை பொலிந்து நீர் தேங்கி இருக்கும் சாலைகள் போலத்தான் இருக்கிறது. போட்டோவை காபி செய்து ஜூம் செய்து பார்த்தாலும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பொதுவாக மலரில் போட்டோக்கள் அருமையாக இருக்கும் என்பது முதலில் கலர் போட்டோக்களை தினசரிகளில் கொணர்ந்த சிறப்பு மலருக்கு உண்டு அன்று அறிகிறேன். போட்டோக்ராபரின் பெயரை வெளியிட்டிருக்கலாம். ஓவியன் தனது ஓவியத்தில் பெயரை பதிப்பது போல போட்டோக்ராபர் பெயரை அச்சிலேற்றிருக்கலாம். என்றாவது ஒரு நாள் மலரின் போட்டோக்ராபர் புலிட்சர் விருது பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் நடக்கும். உங்கள் போட்டோக்ராபருக்கு எங்கலின் அன்பையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். இப்போதெல்லாம் நான் அதிகம் மலரில் விரும்பி பார்க்கும் பகுதியாக இருப்பது "தமிழகத்தின் கண்ணாடி" பகுதி.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
24-அக்-202120:10:24 IST Report Abuse
r.sundaram நாகர்கோயில்-கோவை ரயில் நாகர்கோயிலில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படும் என்றும் கோவையில் இருந்து எத்தனை மணிக்கு கிளம்பும் என்றும் தகவல் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X