தென்மாவட்ட ரயில்களின் நேரம் நவ.,1ம் தேதி முதல் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்ட ரயில்களின் நேரம் நவ.,1ம் தேதி முதல் மாற்றம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (3)
Share
மதுரை: ‛‛மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் நேரம் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது,'' என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது: தென்மாவட்ட ரயில்களின் நேரம் கடந்த 1ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மேலும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நவ., 1ம் தேதி முதல்
தென்மாவட்டம், ரயில்கள், நேரம், நவம்பர் 1ம் தேதி, மாற்றம், மதுரை, கோட்ட ரயில்வே, அறிவிப்பு

மதுரை: ‛‛மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் நேரம் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது,'' என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது: தென்மாவட்ட ரயில்களின் நேரம் கடந்த 1ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மேலும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நவ., 1ம் தேதி முதல் புனலூர் - மதுரை சிறப்பு ரயில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.


latest tamil news


சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 11.05 மணிக்கும், மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லம் - சென்னை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். கோவை - நாகர்கோவில் நள்ளிரவு சிறப்பு ரயில் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கும், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கும் புறப்படும்.

மதுரை - ராமேசுவரம் சிறப்பு ரயில் நவ., 4ம் தேதி முதல் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7.15 மணிக்கும், சூடியூரில் இருந்து இரவு 7.25 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.40 மணிக்கும், சத்திரக்குடியில் இருந்து இரவு 7.56 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கும், உச்சிப்புளியில் இருந்து இரவு 8.32 மணிக்கும், மண்டபத்தில் இருந்து இரவு 8.52 மணிக்கும், பாம்பனில் இருந்து இரவு 9.10 மணிக்கும் புறப்படும். இரவு 10.10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

புவனேசுவர் - ராமேசுவரம் சிறப்பு ரயில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.25 மணிக்கும், ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7.55 மணிக்கும் புறப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X