திருநெல்வேலி: முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்ற பயிற்சி மாணவர்கள் நெல்லையில் 25 ஆண்டுகளுக்குப் பின்பு குடும்பத்துடன் சந்தித்து பேசினர்.
முனைஞ்சி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கடந்த 93 - 95 ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்துடன் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நெல்லையில் வீரமாணிக்கபுரத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தற்பொழுது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரியும் வேலுச்சாமி, ராமராஜ், குமுதா, உமா ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். ஆசிரியர்கள் நேதாஜி, சீதாராமன், தங்கதுரை, புவனேஸ்வரி, ஜெயவனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துமணி வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியகள் முத்துலட்சுமி, முருகேஸ்வரி, ராஜேஸ்வரி, சாந்தகுமார், நெப்போலியன், முத்துராஜ்,செல்வ பால சுந்தரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமை ஆசிரியர் செ.பால்ராஜ் இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் குறிச்சி புனித தோமையார் உயர்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 C தேர்வில் வெற்றி பெற்று தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக (பயிற்சி) பணிபுரியும் சக தோழியான சங்கீதா சின்ன ராணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் 20 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் மலரும் நினைவுகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் சங்கீதா சின்னராணி ஏற்புரை வழங்கினார். ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE