ஜி-20 மாநாடு; அக்., 29- நவ.,2 வரை பிரதமர் மோடி அரசு முறைப்பயணம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கிளாஸ்கோ: வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை பல்வேறு மாநாடுகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ரோம், கிளாஸ்கோ, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 16-வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள பிரதமர், காலநிலை குறித்து விவாதிக்கும் முக்கிய கூட்டமான சிஓபி-26 மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு துறை தகவல்

கிளாஸ்கோ: வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை பல்வேறு மாநாடுகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ரோம், கிளாஸ்கோ, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 16-வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள பிரதமர், காலநிலை குறித்து விவாதிக்கும் முக்கிய கூட்டமான சிஓபி-26 மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு துறை தகவல் வெளியிட்டுள்ளது.latest tamil newsபருவநிலை மாற்றத்தை அடுத்து உலக நாடுகள் பல தங்கள் நாட்டு தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் புகைகளை 2050ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தங்கள் தொழிற்சாலை புகைகளை கட்டுப்படுத்தினாலே ஒழிய புவி வெப்பமயமாதலை தடுக்க முடியாது என்று உலக நாடுகள் பல வலியுறுத்தி வருகின்றன.


சிஓபி-26 மாநாடு


கார்பன் புகை வெளியிடும் அளவை குறைத்துக்கொள்வதாக மேற்கண்ட நாடுகள் உறுதி அளித்துள்ள நிலையில் இதுகுறித்து விவாதிக்க சிஓபி-26 மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச கார்பன் புகை அளவுகோல் குறித்தும் அதில் இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதிக்க உள்ளார்.


latest tamil news

ஜி-20- மாநாடுரோம் நகரில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டின் 16ஆவது கூட்டத்தில் கொரோனா தாக்கம், பொருளாதாரத்தை மீட்பு, சர்வதேச வர்த்தகம், பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்பு, சீன விவகாரம் உள்ளிட்டவை பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202112:54:30 IST Report Abuse
அப்புசாமி ஆடுன காலும் பாடுன் வாயும் ஓயாது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-அக்-202120:26:28 IST Report Abuse
மலரின் மகள் இந்தியா ஒளிர்கிறது என்று விளம்பர படுத்தினார்கள் வாஜ்பேய் காலத்தில். என் நாடித்துடிப்பதெல்லாம் இந்திய நலனுக்கே என்று விளம்பரம் செய்ததது காங்கிரஸ். இப்போது இந்தியா உண்மையாக ஒளிர்கிறது மிளிர்கிறது. பின்னவர்கள் ட்விட்டரில் துடிப்போடு இருப்பதோடு நின்றுவிட்டார்கள். காங்கிரஸ் தன்னை தானே துண்டாடிக்கொள்ளும் நிலை மாறவேண்டும். காங்கிரசிற்கு ஒரு நல்ல தலைவர் யாரவது ஒருவரை யோசிக்கலாம் என்றால் ஒருவரும் கிடைக்க மாட்டேனென்கிறார்கள். தேடுவோம். யார் சரியானவர்கள் என்று யோசித்து சிந்தியா குடும்பத்தில் அங்கு இங்கு என்று தேடலாம் என்று நினைத்தால் அதற்குள் முந்தி கொண்டு வெளியேற்றி விடுவார்கள். அன்றே பிரியங்காவை கொண்டுவந்திருந்தால் உ பி யின் அமேதி தொகுதி அவர்களின் கோட்டையாக தொடர்ந்திருக்கும். இப்போது பிரயோசனமில்லை. கூட்டணிக்கு பிராந்திய காட்சிகள் சேர்த்து கொள்வதில்லை. நிறைய பணம் கேட்கிறார்கள். அதுவும் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே. போகிற போக்கில் பார்த்தல் பஞ்சாயத்து தேர்தலில் மட்டுமே கங்குடன் கூட்டணி என்று சொல்லிவிடுவார்கள் போல. காங்கிரஸ் தன் தலைமையை மாற்றி கொண்டு மெருகேற்றி கொள்ளவேண்டும். இனியாவது தொண்டர்களை கட்சியில் சேர்க்கவேண்டும். நல்ல கொள்கைகள் உளள்து, கோட்பாடுகள் உள்ளது பாரம்பரியம் உள்ளது. ஆனால் தேர்தல் வாக்குகள்?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
24-அக்-202119:48:31 IST Report Abuse
Visu Iyer பிரதமரின் சீன பயணத்தை தான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்...
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
24-அக்-202120:42:23 IST Report Abuse
Davamani Arumuga Gounder..உமது ஆவல் கட்டாயம் நிறைவேற்றப்படும் .. ஆனால், கண்டிப்பாக அது அரசு முறைப் பயணமாகவும், நாட்டுக்கு நன்மைகளை சேர்க்கும் நோக்கிலும் மட்டுமே இருக்கும்.. இத்தாலி கான் குடும்பம் போன்று.. இரகசியமாக சென்று, சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, நாட்டை காட்டிக் கொடுக்கும் புரூட்டஸ் முறை பயணமாக இருக்காது...
Rate this:
yavarum kelir - yadhum vore ,இந்தியா
25-அக்-202113:27:20 IST Report Abuse
yavarum kelirஎந்த சீனா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X