ஜி-20 மாநாடு; அக்., 29- நவ.,2 வரை பிரதமர் மோடி அரசு முறைப்பயணம்| Dinamalar

ஜி-20 மாநாடு; அக்., 29- நவ.,2 வரை பிரதமர் மோடி அரசு முறைப்பயணம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (9)
Share
கிளாஸ்கோ: வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை பல்வேறு மாநாடுகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ரோம், கிளாஸ்கோ, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 16-வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள பிரதமர், காலநிலை குறித்து விவாதிக்கும் முக்கிய கூட்டமான சிஓபி-26 மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு துறை தகவல்

கிளாஸ்கோ: வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை பல்வேறு மாநாடுகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ரோம், கிளாஸ்கோ, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 16-வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள பிரதமர், காலநிலை குறித்து விவாதிக்கும் முக்கிய கூட்டமான சிஓபி-26 மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு துறை தகவல் வெளியிட்டுள்ளது.



latest tamil news



பருவநிலை மாற்றத்தை அடுத்து உலக நாடுகள் பல தங்கள் நாட்டு தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் புகைகளை 2050ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தங்கள் தொழிற்சாலை புகைகளை கட்டுப்படுத்தினாலே ஒழிய புவி வெப்பமயமாதலை தடுக்க முடியாது என்று உலக நாடுகள் பல வலியுறுத்தி வருகின்றன.


சிஓபி-26 மாநாடு


கார்பன் புகை வெளியிடும் அளவை குறைத்துக்கொள்வதாக மேற்கண்ட நாடுகள் உறுதி அளித்துள்ள நிலையில் இதுகுறித்து விவாதிக்க சிஓபி-26 மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச கார்பன் புகை அளவுகோல் குறித்தும் அதில் இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதிக்க உள்ளார்.


latest tamil news





ஜி-20- மாநாடு



ரோம் நகரில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டின் 16ஆவது கூட்டத்தில் கொரோனா தாக்கம், பொருளாதாரத்தை மீட்பு, சர்வதேச வர்த்தகம், பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்பு, சீன விவகாரம் உள்ளிட்டவை பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X