பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,127 ஆக சற்று குறைந்துள்ளது: 1,358 பேர் நலம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,140 -ல் இருந்து 1,127 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,358 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,24,177 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,127 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,140 -ல் இருந்து 1,127 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,358 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,24,177 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,127 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,95,216 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,03,00,938 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 628 பேர் ஆண்கள், 499 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,73,005 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,22,173 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,358 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,46,163 ஆக உயர்ந்துள்ளது.

15 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் 10 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,019 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.24 ம் தேதி) 146 ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-202121:30:55 IST Report Abuse
Vittalanand கோவில்களை மூட முடியாதே சூசைகான் எப்படி ஜார்ஜ் பொன்னையணிக்க ஆறுதல் சொல்வசர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X