எல்லை நிலபரப்பை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றியது சீனா

Added : அக் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
பீஜிங்:கிழக்கு லடாக்கில் இந்திய - சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் எல்லை நிலபரப்புகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நம் அண்டை நாடான சீனா. நம் அண்டை நாடான சீனா, 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா

பீஜிங்:கிழக்கு லடாக்கில் இந்திய - சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் எல்லை நிலபரப்புகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நம் அண்டை நாடான சீனா.



latest tamil news



நம் அண்டை நாடான சீனா, 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பூட்டானுடனான பிரச்னைகள் மட்டும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன.இந்தியா மற்றும் சீனா, 3,488 கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. கிழக்கு லடாக்கில், கடந்தாண்டு மே மாதத்தில் சீன ராணுவத்தின் அத்துமீறி நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

அதையடுத்து, எல்லையில், இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.அதே போல், 400 கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பூட்டான் உடனான எல்லையிலும் பல கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், சீனா புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. சீனாவின் பார்லிமென்டான தேசிய மக்கள் காங்கிரசில் இந்த புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2022, ஜன., 1 முதல் இது அமலுக்கு வருகிறது.'நாட்டின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு என்பது புனிதமானது மற்றும் மீற முடியாதது' என, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் எல்லை மற்றும் நிலப்பரப்பை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, எல்லை பகுதிகளில் புதிய கிராமங்கள் உருவாக்குவது உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளலாம். அங்கு மக்கள் வசிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளலாம்.

அண்டை நாடுகளுடன் உள்ள எல்லைப் பிரச்னைகளுக்கு பேச்சின் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் எல்லை பிரச்னை உள்ள நிலையில், இந்த புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




எல்லை வீரர்களுக்கு கவுரவம்


கிழக்கு லடாக் எல்லையில், சீன படைகளுக்கு எதிராக நடந்த மோதலின்போது, சிறப்பாக செயல்பட்ட, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த 20 வீரர்களுக்கு, வீரதீர விருது வழங்கப்பட்டது.நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி இந்த விருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. டில்லியில்நடந்த, படையின் 60வது நிறுவன நாள் விழாவில், இந்த விருதுகளை, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார். அப்போது அவர், 'இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கூடுதல் பட்டாலியன் விரைவில் இணைக்கப்படும்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
30-அக்-202108:30:29 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM இந்திரா இருந்து இருந்தால் பூட்டனும் நம் மாநிலமாக மாறியிருக்கும் என்ன செய்வது வெட்டி பேசுவாய் நாம் ஆதரிப்பதால் இது போல நடக்க வாய்ப்பில்லை
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
25-அக்-202112:34:30 IST Report Abuse
நல்லவன் கவலை வேண்டாம் , மோடி அரசு கண்காணித்துக்கொண்டே இருக்கும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
25-அக்-202111:30:01 IST Report Abuse
Anand சீனா ஒரு காகித புலி....
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-202112:45:47 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஓங்கும்பலும் நீயிம் எடுத்த புலி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X