காங்., மீண்டும் 7 இடங்களில் வென்றால் பிரியங்காவிற்கு மிகப்பெரிய வெற்றி: உ.பி.,துணை முதல்வர்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
லக்னோ: காங்கிரஸ் மீண்டும் ஏழு இடங்களை பிடித்தாலே அக்கட்சியின் பிரியங்காவிற்கு மிகப் பெரிய வெற்றி என உ.பி.,துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: உ.பி., மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளனர். வரும் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் போட்டியிட வாய்ப்பு மற்றும் இலவச ஸ்கூட்டி ஸ்மார்ட் போன்றவை

லக்னோ: காங்கிரஸ் மீண்டும் ஏழு இடங்களை பிடித்தாலே அக்கட்சியின் பிரியங்காவிற்கு மிகப் பெரிய வெற்றி என உ.பி.,துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறி உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: உ.பி., மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளனர். வரும் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் போட்டியிட வாய்ப்பு மற்றும் இலவச ஸ்கூட்டி ஸ்மார்ட் போன்றவை அக்கட்சிக்கு உதவாது கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி பெற்ற ஏழு இடங்களை மீண்டும் பெற்றாலே அது பிரியங்காவிற்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும். கடந்த 2014 ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்., இரண்டு எம்.பிக்களை பெற்றிருந்தது. அதே போல் 2019 ல் அது ஒன்றாக குறைந்துள்ளது.


latest tamil news



அகிலேஷின் சமஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் 2017-ல் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றால் மகிழ்ச்சி. ஆம் ஆத்மி மற்றும் அசாதுதீன் ஓவைசி கட்சிகள் ஓரு பொருட்டல்ல அவர்கள்வாக்குகளை பிரிப்பவர்கள் என கூறினார். மேலும் வரும் 2022-ல் பா.ஜ.,வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
25-அக்-202113:14:51 IST Report Abuse
ஜெயந்தன் இந்த திமிர் பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை.....100 கோடி ஊசி போட்டதை மட்டும் பெருசா பீத்திக்கிட்டு அலையும் இவர்கள்...வலிலைவாசி உயர்வால் அவதிப்படும் சாமானியனின் வலி யையும் வேதனையை யும் கேலி செய்யும் இவர்களை இந்த முறை விரட்டி அடிப்பார்கள்...
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
25-அக்-202112:40:54 IST Report Abuse
karuppasamy நாங்கள் அதிரடியாக பெட்ரோல் விலையை வாக்கு கிடைப்பதற்காக குறைப்போம். மக்களுக்கு பணம் அவரவர் அக்கௌண்டில் சேர்ந்துவிடும். இன்னும் பாருங்கள் எங்களுடைய
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
25-அக்-202111:57:55 IST Report Abuse
ஜெயந்தன் பெட்ரோல் டீசல் ரூ. 100 ஐ தாண்டி பல நாளாச்சு....காஸ் 1000 த்தை நெருங்க போகிறது...இதெல்லாம் பிஜேபியின் சாதனை...சொரணை உள்ள எந்த உ பி காரனும் மீண்டும் பிஜேபி க்கு வாக்களிக்க மாட்டான்...அங்கே பிஜேபி யை விரட்டினால 2024 இல் இந்தியாவை விட்டே விரட்டுவார்கள் மக்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X