காங்., மீண்டும் 7 இடங்களில் வென்றால் பிரியங்காவிற்கு மிகப்பெரிய வெற்றி: உ.பி.,துணை முதல்வர்| Dinamalar

காங்., மீண்டும் 7 இடங்களில் வென்றால் பிரியங்காவிற்கு மிகப்பெரிய வெற்றி: உ.பி.,துணை முதல்வர்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (13)
Share
லக்னோ: காங்கிரஸ் மீண்டும் ஏழு இடங்களை பிடித்தாலே அக்கட்சியின் பிரியங்காவிற்கு மிகப் பெரிய வெற்றி என உ.பி.,துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: உ.பி., மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளனர். வரும் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் போட்டியிட வாய்ப்பு மற்றும் இலவச ஸ்கூட்டி ஸ்மார்ட் போன்றவை

லக்னோ: காங்கிரஸ் மீண்டும் ஏழு இடங்களை பிடித்தாலே அக்கட்சியின் பிரியங்காவிற்கு மிகப் பெரிய வெற்றி என உ.பி.,துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறி உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: உ.பி., மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளனர். வரும் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் போட்டியிட வாய்ப்பு மற்றும் இலவச ஸ்கூட்டி ஸ்மார்ட் போன்றவை அக்கட்சிக்கு உதவாது கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி பெற்ற ஏழு இடங்களை மீண்டும் பெற்றாலே அது பிரியங்காவிற்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும். கடந்த 2014 ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்., இரண்டு எம்.பிக்களை பெற்றிருந்தது. அதே போல் 2019 ல் அது ஒன்றாக குறைந்துள்ளது.


latest tamil news



அகிலேஷின் சமஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் 2017-ல் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றால் மகிழ்ச்சி. ஆம் ஆத்மி மற்றும் அசாதுதீன் ஓவைசி கட்சிகள் ஓரு பொருட்டல்ல அவர்கள்வாக்குகளை பிரிப்பவர்கள் என கூறினார். மேலும் வரும் 2022-ல் பா.ஜ.,வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X