பொது செய்தி

தமிழ்நாடு

விபத்துகள் தவிர்க்க வளைவுகளில் மேம்பாடு: முழுமையாக விரிவுபடுத்த நிதி எதிர்பார்ப்பு

Added : அக் 24, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஆபத்தான வளைவுகளில் விரிவுபடுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோட்டை முழுமையாக விரிவாக்கம் செய்ய, நிதி ஒதுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால் தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி -
 விபத்துகள் தவிர்க்க வளைவுகளில் மேம்பாடு: முழுமையாக விரிவுபடுத்த நிதி எதிர்பார்ப்பு

ஆனைமலை:பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஆபத்தான வளைவுகளில் விரிவுபடுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோட்டை முழுமையாக விரிவாக்கம் செய்ய, நிதி ஒதுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால் தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி - வால்பாறை ரோடு குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இந்த ரோட்டில், வேடசெந்துார் தனியார் பள்ளி அருகே வளைவு குறுகலாக இருப்பதால், அதிக விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இப்பகுதியில், 16க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு, இருவர் இறந்தனர்.இதேபோல், அங்லக்குறிச்சி ஜே.ஜே., நகர், புளியங்கண்டி உள்பட பகுதிகளில், வளைவு குறுகலாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.விபத்துக்களை தவிர்க்க, வேடசெந்துார் தனியார் பள்ளி அருகே, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 400 மீ., தொலைவுக்கு ரோட்டை விரிவுபடுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கியுள்ளனர்.
ஆனால், பல வளைவுகளில் விரிவாக்க பணி துவங்கவும், ரோட்டை முழுமையாக விரிவுபடுத்தவும், இன்னும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.பொள்ளாச்சி - மீன்கரை, ஆனைமலை - உடுமலை மற்றும் டாப்சிலிப், ஆனைமலை - பொள்ளாச்சி ரோடு, ஏழு மீட்டர் அகலத்துக்கு உள்ளது. இந்நிலையில், விபத்துக்களை தவிர்க்க பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டை, ஏழு மீட்டரில் இருந்து, 10.5 மீட்டராக விரிவாக்கம் செய்ய, 9.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்பின், ஆனைமலை - உடுமலை ரோட்டுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இரண்டு ரோடுகளிலும், 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இதேபோல், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டை, 10.5 மீட்டராக விரிவுபடுத்த நிதி ஒதுக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறையினர் அரசுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், இன்னமும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த, நா.மூ.சுங்கம் முதல் ஆழியாறு வரையில் ரோடு விரிவுபடுத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X